வியாழன், 20 அக்டோபர், 2022

ஆசிரியர்களின் ஜாதி சொற்களால் மனமுடைந்த இரண்டு மாணவர்கள் தற்கொலை! இரா.அதியமான். நிறுவனர் தலைவர்.ஆதித்தமிழர் பேரவை.

May be an image of 1 person, child and sitting
May be an image of 1 person and text

Thangaraj Gandhi  : அய்யா அதியமான் அறிக்கை!  அருந்ததியர் மாணவர் சீனு மரணம்.!
போராடியவர்களை உடனே விடுதலை செய்து, மரண வழக்கை
சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்.!
ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை.!
கடவுள் தான் உலகை படைத்தார்,கடவுள் தான் மனிதனை படைத்தார் என்கிற பிற்போக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களால் தான் கல்வி நிலையங்கள் இன்று பாழ்பட்டு கிடக்கிறது .
இது போன்ற சாதிய  பிற்போக்கு தனத்தை டன் கணக்கில் மூளைக்குள் பதிய வைத்து கொண்டதன் விளைவாக தென்காசி மாவட்டம்
கடையல்லூர் தாலுகா அரியநாயகி புரத்தில் செயல்படும் இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்களின் உயிர்களை பறிக்க காரணமாய் அமைந்திருக்கிறது.
கடந்த 14-ந் தேதி அரியநாயகி புரம் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அவர்களின் மகன் சீனு (ஏழாம் வகுப்பு மாணவர்) வின் மரணம் கேட்போரை துடி துடிக்க வைக்கிறது.


இதே போல் அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின் முறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் சாதிய வன்சொற் தாக்குதலால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகின்றது.
குறிப்பாக அங்கு பணிபுரியும் சில ஆசிரியர்கள் "நீ யெல்லாம் பீ அள்ளதான் லாயக்கு", "மாட்டுக் கறி தின்னுவதால் தான் புத்தி வரமாட்டேங்குது " என சாதிய வன்மத்தோடு இழிவு படுத்தி வசைபாடுவதாக மாணவனின் தந்தை ஆறுமுகம் புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
சாதிய வன்மத்தோடு மாணவர்களை இழிவு படுத்தியதால் 11 வகுப்பு மாணவர் குமரேசன் மற்றும் இன்பராஜ் ஆகியோர் இன்று நம்மிடம் இல்லை
நிலைமையை அறிந்த
சட்டமன்ற உறுப்பினர் ராஜா (திமுக) அவர்களும் மாணவர் சீனு குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
மேலும் மாணவர் மரணத்திற்கு
நீதி கேட்டு கடந்த நான்கு தினங்களாக போராடி வந்த பொதுமக்களை காவல் துறை தனது
அதிகாரத்தனத்தை காட்டி போராடிய சிலர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறார்கள்.
மாவட்ட நிர்வாகம்  உடனடியாக தலையீடு செய்து அரியநாயகி புரம் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மாவட்ட நிதியிலிருந்து உடனடியாக 25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் எனவும் மூவர் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதோடு போராடியவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டுமென ஆதித்தமிழர் பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
  - இரா.அதியமான்.
நிறுவனர் தலைவர்.
ஆதித்தமிழர் பேரவை.
18-10-2022

 May be an image of 4 people, people sitting and outdoors

கருத்துகள் இல்லை: