BBC Tamil : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படாமல் இருக்க அப்போலோ மருத்துவர் தந்திரம் செய்தார் என்பன உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது தனக்கு அளிக்கப்படவிருந்த சிகிச்சை தொடர்பாக ஒப்புக்கொண்டது என்ன, சசிகலா தவிர வேறு யார் மீதெல்லாம் விசாரணை செய்யப்பட வேண்டும் என வழங்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
‘சுயநினைவுடன் ஒப்புதல் அளித்த ஜெயலலிதா’
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீன் சர்மா, 25.11.2016 அன்று மருத்துவமனையில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது அவருடன் விவாதித்து முன்மொழியப்பட்ட சிகிச்சைக்கு மறைந்த முதல்வர் ஒப்புதல் அளித்தார்.
மறைந்த முதல்வரின் இதயத்தில் வளர்ந்த வெஜிடேஷன் மற்றும் இதர உடல்நல கோளாறுகளை கருத்தில் கொண்டு உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பது மேற்சொன்ன அமெரிக்க மருத்துவரின் கருத்தாக இருந்தது. (பக்கம் 551, 552 – 47.16 )
அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த நீதிபதி ஆறுமுகசாமி
ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சென்ற ஆகஸ்டு மாத இறுதியில் முதல்வரிடம் சமர்ப்பித்த நீதிபதி ஆறுமுகசாமி
‘புத்திசாலி பெண்மணியான மறைந்த முதல்வர்…’
மேற்சொன்னவை 25.11. 2016 அன்று டாக்டர் பாபு ஆபிரகாமால் எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டிருந்தது.
புத்திசாலி பெண்மணியான மறைந்த முதல்வர் அவருக்கு இதே அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்ட உடனேயே அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவர் அதற்கு ஒப்புக்கொண்டிருப்பார்.
இரண்டு மாதங்களுக்கு பின்னர் இங்கிலாந்தில் இருந்து வந்த தீவிர சிகிச்சை மருத்துவரின் கருத்துப்படி இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு மாற்றப்பட்டது.
‘ஆனால் அன்று மருத்துவ ரீதியாக மறைந்த முதல்வரை பரிசோதிக்காத இங்கிலாந்து மருத்துவர் எழுத்துபூர்வமாக அல்லாமல் நேரடியாக வாய்மொழியாக கருத்து தெரிவித்தார் என்று கூறப்படுகிறது’ என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாபு ஆபிரகாம் அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற இங்கிலாந்து மருத்துவரின் வாய்வழி கருத்தை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளார்.
இம்முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்க மருத்துவர் தவிர சசிகலாவும் பெற்றிருந்தார்.
நெருக்கடியின் போது முடிவெடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சையை தொடராமல் தவறிழைத்திருக்கலாம்.
இது அமெரிக்க மருத்துவரின் கருத்துப்படி மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம். (பக்கம் 552, 553 – 47.17 )
‘தந்திரம் செய்த டாக்டர் பாபு ஆபிரகாம்’
அன்றே நடைமுறையை செய்ய ஒப்புக்கொண்ட டாக்டர் சமீன் சர்மாவின் கருத்தை முதல்வர் ஏற்றுக்கொண்ட பின்னர் இம்மாற்றம் பின்னிட்டு யோசனையாக வந்துள்ளது.
டாக்டர் சமீன் ஷர்மா ஆஞ்சியோ செய்யத் தயாராக இருந்து மறைந்த முதல்வரும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு நுரையீரல் நிபுணரான டாக்டர் பாபு ஆபிரகாம் ஏன் டாக்டர் ரிச்சர்டு பீலேவை அழைக்க வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது அப்போலோ மருத்துவமனை ஆவணங்களில் பதிவுகளில் இருந்து தெளிவாகிறது.
எனவே ஆஞ்சியோவை தவிர்ப்பதற்காக சில அதிகாரம் பெற்றவருக்கு உதவ டாக்டர் பாபு ஆபிரகாம் தீவிர மருத்துவரான டாக்டர் ரிச்சர்ட் பிலே அறுவை சிகிச்சை தள்ளிப் போடலாம் என்று கருத்து தெரிவித்ததாக ஒரு தந்திரம் செய்து அமெரிக்க மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணருக்கு ஆலோசனை வழங்கினார் என்று ஆணையம் முடிவு செய்கிறது. (பக்கம் 553 – 47.18)
ஜெயலலிதா இதய செயலிழப்பு ஏற்பட்டது எப்போது?
மறைந்த முதல்வரின் இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதுமாகும்.
இறப்பு நேரம் அதிகாரப்பூர்வமாக 05.12.16, அன்று இரவு 11:30 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் மறைந்த முதல்வரின் இறுதி நேரத்தில் அவரைக் கவனித்துக்கொண்ட பாராமெடிக்கல் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெருமளவில் வேறுபாடுள்ளது.
04.12.16 அன்று பிற்பகல் 3:50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும், இதயத்தில் மின்சார செயல்பாடு இல்லை மற்றும் ரத்த ஓட்டம் இல்னல என்பதை அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்த செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணி மருத்துவர்களின் தெளிவான சாட்சியங்களாகும். (பக்கம் 537 – 46.71)
வேறு தேதியில் முதலாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு
மறைந்த முதல்வரின் மருமகன், தீபக்கின் சாட்சியத்தின்படி, மனறந்த முதல்வரின் மரண நேரத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்.
நோயுற்ற மறைந்த முதல்வரை அருகிலிருந்து கவனித்துக்சகாண்ட மற்றும் அவர் மருத்துவமனனயில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த நிகழ்வுகளையும் முன்னேற்றங்கனளயும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையையும் அவ்வப்போது முழுமையாகத் தெரிந்த அவரின் ஓட்டுநர் மற்றும் பூங்குன்றன் ஆகிய இருவரின் தகவலின் அடிப்படையில், 04.12.2016 அன்று மதியம் 3:00 முதல் 3:30 மணி வரை என மறைந்த முதல்வரின் இறந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு, அவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவை தீபக் அனுசரித்தார் என்பது அவரது சாட்சியமாகும். (பக்கம் 538 – 46.73)
ஜெயலலிதா ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை
ஜெயலலிதாவின் இதயத்தில் வெஜிடேசன், பெர்ஃபொரேசன் மற்றும் டயஸ்டோலிக் டிஸ்பரேஷன் ஆகியவற்றுக்காக பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் அவரது கடைசி மூச்சு வரை ஏன் நடக்கவில்லை (பக்கம் 557 – 47.27. ஒ)
இரண்டு நுரையீரல்களிலிருந்தும் (ஒரு நாளைக்கு சுமார் 1000 மிலி) பெருமளவிலான திரவம் வெளியேற்றப்படுவதைக் கருத்தில் கொண்டாவது, மருத்துவமனையில் ஆதரவாக நெருங்கிய உறவினர் இல்லாத மனறந்த முதல்வர் மீது சில அனுதாபங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். (பக்கம் 558 – 47.27.ஓ)
டாக்டர் ரிச்சர்ட் பீலே மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அனைத்துச் செல்லத் தயாரென்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 – 47.27.ஓள)(பக்கம் 558 – 47.27. ஃ)
டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்வதைப் பற்றி விளக்கியபின், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை? (பக்கம் 558 – 47.27. அ.அ)
சசிகலா தவிர யார் மீது விசாரணைக்கு பரிந்துரை?
47.28. இந்த அனனத்து கருத்துகளிலிருந்தும், வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர்.ஜே. இராதா கிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக செய்து, விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.
47.29. டாக்டர் ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
அவர்கள் பம்பாய், பிரிட்டன் மற்றும் அமெரிக்க மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்ட விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் ராமோகன் ராவை பொறுத்தவரை செயல்முறைகளுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பம் விடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை தவிர ஆணையம் அவருக்கு எதிராக குறைகள் எதையும் காணவில்லை.
நிச்சயமாக இது ஒரு நபரால் செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும். குறிப்பாக இது முதல்வரது உயிர் தொடர்பானது என்பதால் அதற்கான விளைவுகளை நிச்சயம் பெறுவார் எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. (பக்கம் 559 – 47.30)
‘அப்போலோ பிரதாப் ரெட்டி வெளியிட்ட பொய்யான அறிக்கை’
அதேபோல அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி உண்மைகளை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும் செய்தியாளர் சந்திப்பில் மறைந்த முதல்வர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டார்.
இரண்டாவதாக அவர் தனது அறையில் அடிக்கடி விளக்க கூட்டத்தை நடத்திய போதிலும் மறைந்த முதல்வரின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்தத் தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது. (பக்கம் 559, 560 – 47.31)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக