Chendur Vel : என்னங்க LRJதான் எதோ கோவத்திலே எழுதராரு என்றால் அதை அதை ஷேர்செய்கின்ரீர்களே!
நிலவினியன் மாணிக்கம் Chendur Vel : அது வன்மம் என நாமாகவே எப்படி ஒரு முடிவுக்கு வருவது
Chendur Vel நிலவினியன் மாணிக்கம் : நான் வன்மம் என்று சொல்லவில்லையே !
நிலவினியன் மாணிக்கம் Chendur Vel எப்படி கோபமுன்னு கடந்து போறது?
Madhav Anandhan நிலவினியன் மாணிக்கம் : திமுகவை ஆதரிக்கும் ஒரு குழுவினரை தாக்கி பேசுவதால் யாருக்கு இலாபம்?
Madhav Anandhan : இந்த பதிவில் தனிப்பட்ட வன்மம் தவிர எதுவும் இல்லை. LRJ தன்னுடைய பிழைப்புக்காக எழுதுகிறார்.
மற்றவர்கள் அப்படி அல்ல. அவர்கள் அனைவருக்கும் வேறு வேலை (பொறியாளர்கள், மருத்துவர்கள், மற்றும் பல துறைகளில்)செய்கிறார்கள்.
Antriya அண்ணா இதுக்கு பல பேர் பதில் சொல்லிட்டாங்க
நிலவினியன் மாணிக்கம் Antriya : அந்த பதிலில் டேக் பண்ணுயா என்னை
Madhav Anandhan : The post starts with "மருத்துவர் மரியானோவின் அடியாள் கும்பலுக்கு" and ss of DMK - MP is attached!!! What is the purpose of this kind of post?
நிலவினியன் மாணிக்கம் : madhav Anandhan ஒரு எழுத்தாளரின் விமர்சனம்....
Madhav Anandhan நிலவினியன் மாணிக்கம் : ஒரு திமுக ஆதரவாளனாக, திமுகவின் எந்த குழுவினரையும் அவமதிக்கும், அவதூறு செய்யும் எந்த பதிவையும் நான் பகிர்வதில்லை. எனக்கு அந்த கருத்து சரி என்று தோன்றினால் கூட அதை கடந்து சென்று விடுவேன்.main topic
LR Jagadheesan : மருத்துவர் மரியானோவின் அடியாள் கும்பலுக்கு
முன்னெச்சரிக்கை:
இந்த பதிவு மருத்துவர் மரியானோ மீதான வழக்கு பற்றியதல்ல. அந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் அவரை தண்டித்த தீர்ப்பும் உச்சநீதிமன்றம் அவரை அந்த தண்டனையில் இருந்து விடுவித்த தீர்ப்பும் முழுமையாய் இணையத்தில் இருக்கின்றன.
காரணம் Facebook மூலம் அறிமுகமாகி பிறகு அதே Facebook மூலம் நண்பரான இன்னொருவர் வழியாக நேரிலும் சந்தித்து நண்பர்களாக இருந்து பிறகு வேறொரு பிரச்சனையில் எனக்கும் அவருக்கும் கசப்பு ஏற்பட்டு பேசிக்கொள்ளாத பிளவும் ஏற்பட்டதால் அவர் மீதான வழக்கு குறித்து நான் எந்த கருத்து சொன்னாலும் அது எங்களுக்கு இடையிலான பகைமையில் நான் ஒருசார்பாக சொல்வதாகவே முடியும் என்பதால் அதற்குள் நான் இதுவரை செல்லவில்லை. இனி செல்லவும் விருப்பம் இல்லை.
அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் சில செய்திகளை பகிர்வதற்கு தேவை இருப்பதாலேயே இந்த பதிவு. இந்த பதிவை படித்து முடிக்கும்போது அந்த தேவை ஏன் எழுந்தது என்பது உங்களுக்கே விளங்கும்.
இந்தப்பதிவு முதன்மையாக அவரது அடியாள் படைகளைப்பற்றியது. அவர்களின் இணைய ரவுடித்தனம் பற்றியது. அவர்களின் இரட்டை வேடம் பற்றியது. அவர்கள் கடந்த சிலநாட்களாக உரக்க உபதேசித்துவரும் "தனிமனித வன்ம எதிர்ப்பு" போலித்தனம் பற்றியது.
இந்த பதிவுக்குள் செல்வதற்கு முன் தயவு செய்து இந்த பதிவில் இருக்கும் Screenshotsஐ ஒருமுறை முழுமையாய் வாசித்துவிடுங்கள்.
இவையெல்லாம் மரியானோவின் மனைவி அகாலமாய் இறந்த அன்று அவரது மிக நெருக்கமான நண்பர்கள் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் சில. அந்த அகால மரணம் நடந்த சிலமணிகளில் இந்த பதிவுகள் எல்லாம் எழுதப்பட்டன. அந்த எல்லாபதிவுகளிலுமே சொல்லிவைத்தாற்போல இறந்தவர் ectopic pregnancyயில் ஏற்பட்ட எதிர்பாராத பாதிப்பால் இறந்தார் என்று ஒருவர் விடாமல் எழுதினார்கள்.
அதிலும் மெத்தப்படித்த மருத்துவர்கள்; வெளிநாடுவாழ் மருத்துவர்கள் எல்லாமே ectopic pregnancy என்றால் என்ன? அதன் ஆபத்துகள் என்ன? அதனால் அகாலமரணங்கள் எப்படி ஏற்படும் என்று வரைபடங்களின் உதவியோடு மருத்துவ பாடத்தையே சமூகவலைத்தளங்களில் எடுத்தார்கள். நான் உட்பட பலருக்கும் ectopic pregnancy என்கிற வார்த்தையும் அதன் மருத்துவ ஆபத்தும் அப்போது தான் தெரியவந்தது.
இந்த பதிவுகளைப்பார்த்து அவற்றின் மூலம் மருத்துவர் மரியானோவுக்கு நடந்த பெரும் இழப்புக்காக மனம் வருந்திய பலருக்கும் சிலவாரங்கள் கழித்து அவரது மனைவி ectopic pregnancyயால் இறக்கவில்லை என்றும் மாறாக அவர் தற்கொலை செய்துகொண்டார்; அந்த தற்கொலைக்கு மரியானோவும் அவர் குடும்பத்தாரும் தான் தூண்டினார்கள் என்றும் இறந்துபோன மரியானோவின் மனைவியின் பெற்றோரும் குடும்பத்தாரும் பகிரங்கமாக குற்றம் சுமத்தி காவல்துறையில் புகார் தந்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அதற்கு முக்கிய காரணம் இறந்தவர் ectopic pregnancyயால் இறந்தார் என்று மரியானோவின் மிக நெருக்கமான நண்பர்கள் அதுவும் மருத்துவர்களே பக்கம் பக்கமாக எழுதிய பதிவுகள். இறந்தவரின் பெற்றோரோ அவர் தற்கொலை செய்துகொண்டார் அதற்கு காரணம் மரியானோவும் அவரது குடும்பமும் என்று காவல்துறையில் பகிரங்கமாக புகார் கொடுத்தபின் மரியானோவின் நண்பர்கள் அதுவரை பரப்பிவந்த ectopic pregnancy என்கிற வாதம் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியது.
தற்கொலை செய்துகொண்டவரை இவர்கள் எல்லோரும் ஒரே குரலில் ectopic pregnancyயால் இறந்தார் என்று ஏன் திரும்பத்திரும்ப சொன்னார்கள்? இறந்தவர் ectopic pregnancyயால் இறந்தார் என்கிற பொய்யை இவர்களுக்கு சொன்னது யார்? என்ன நோக்கத்துக்காக இப்படி ஒரு பொய் உருவாக்கப்பட்டது? யாரால் வடிவமைக்கப்பட்டது? இந்த பொய் மரியானோவின் நண்பர்கள் மூலம் யாரால் பொதுவெளியில் பரப்பப்பட்டது? என்ன நோக்கத்துக்காக அது செய்யப்பட்டது?
அந்த கேள்விகளுக்கு இன்றுவரை யாரும் பதில் சொன்னதாக தெரியவில்லை (நான் அறிந்தவரை). அப்படி இவர்கள் எல்லோரும் சொல்லிவைத்தார்போல் சேர்ந்து பரப்பிய ectopic pregnancyயால் இறந்தார் என்கிற பொய்தான் பின்னாளில் இறந்தவரின் பெற்றோர் தங்கள் மகளின் மரணத்துக்கு மருமகனே காரணம் என்று குற்றம் சுமத்தியபோது மரியானோ மீதும் அவரது பெற்றோர் மீதும் சந்தேகம் எழவும் வலுக்கவும் காரணமாக அமைந்தது.
எனவே திட்டமிட்டு பொய்சொன்ன அல்லது அந்த பொய்யை பரப்பிய மரியானோவின் நண்பர்கள் தான் பொதுவெளியில் அவர் மீதான சந்தேகநிழல் படர முக்கிய காரணகர்த்தாக்கள். இப்போதாவது அவர்களில் மனசாட்சி மிச்சமிருக்கும் யாராவது ஒருவர் இந்த ectopic pregnancyயால் இறந்தார் என்கிற பொய்யை தங்களுக்கு கொடுத்தது யார் என்பதை பொதுவெளியில் சொல்லவேண்டும். அதுவே அவர்களிடம் அறிவுநாணயம் கொஞ்சமேனும் மிச்சம் இருக்கிறது என்பதற்கு சாட்சியாய் அமையும்.
ஆனால் அவர்களில் யாரும் அதை செய்யமாட்டார்கள் என்பதே என் அனுமானம். ஏனெனில் இவர்கள் தங்களுக்கு பிடித்தவரை காப்பாற்ற எந்த அளவுக்குப்போவார்கள். அதேபோல் தங்களுக்கு பிடிக்காதவரை அவதூறு செய்வதில் எவ்வளவு கீழேயும் இறங்குவார்கள்; இவர்கள் நினைத்தால் ஒரு கைதேர்ந்த மாஃபியா குவைப்போல கூட்டாக எப்படியெல்லாம் தனிமனித தாக்குதல் தொடுப்பார்கள் என்பதை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன் என்பதால் இவர்களைப்பற்றி எனக்கு மற்றவர்களைவிட நன்கு தெரியும்.
தற்போதைய திமுக ஆட்சி அமைந்தபின் இந்த ஆட்சி/ஆளும்கட்சியை இனிமேல் விமர்சிக்கப்போவதாக நான் பொதுவெளியில் சொல்லிவிட்டு என் விமர்சனங்களை ஆரம்பித்தேன். குறிப்பாக திமுக என்கிற ஆளும்கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் அதிகரித்துவரும் முதல்வர் முக ஸ்டாலின் குடும்ப ஆதிக்கமும் உதயநிதியின் திணிப்பும் தவறு என்பதை எதிர்த்து நான் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
அதை மருத்துவர் மரியானோவும் அவரது நண்பர்களும் விரும்பவில்லை. என்னுடைய பதிவுகள் அதில் இருக்கும் தரவுகள் மற்றும் தர்க்கங்களுக்கு பதில் சொல்வதற்கு பதிலாக இவர்கள் என் மீது தனிப்பட்ட தாக்குதலை ஆரம்பித்தார்கள். அதை துவக்கிவைத்தவர் மருத்துவர் மரியானோ.
அவர் ஒரு closed WhatsApp குழு வைத்திருக்கிறார். அதில் நான் கனிமொழியிடம் காசுவாங்கிக்கொண்டு எழுதுவதாக ஆதாரமற்ற பொய்யை விதைத்தார். அதுவும் அந்தம்மா மாதம் ஐந்துலட்சம் தருவதாக மிகத்துல்லியமாக கணக்கெழுதினார்.
அதை கேள்விப்பட்டபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம் கனிமொழி அந்த அளவுக்கு காசுதருவார் என்று நம்பும் அளவுக்கு இவர்கள் மண்ணாந்தையாய் இருக்கிறார்களே என்று சிரித்துக்கொண்டேன்.
ஆனால் மரியானோ கொளுத்திப்போட்ட பொய்யை அவரது அடியாள் படை அப்படியே கவ்விக்கொண்டு ஊர் முழுக்க பரப்பியது. ஒருகட்டத்தில் எனக்கு நெருக்கமான நண்பர்களே (அல்லது நண்பர்கள் என்று நான் நம்பியவர்கள்) அதை என்னிடம் உண்மையோ என்கிற தொனியில் கேட்டபோது நான் அதிர்ந்தும் போனேன். அவர்களின் அறியாமையை நினைத்தும் நான் அவர்களை உண்மையான நண்பர்களாக நம்பியிருந்ததை நினைத்தும்.
மரியானோவின் அடியாள் ஜந்துக்களில் ஒன்றான ரவிஷங்கர் அய்யாக்கண்ணு என்கிற மெத்தப்படித்த பொறுக்கி என்னிடமே பகிரங்கமாக சவால்விட்டது. “நீங்கள் கனிமொழியிடம் காசுவாங்கிக்கொண்டு தான் எழுதுகிறீர்களாமே? உண்மையா? பொய்யா? பதில் சொல்லுங்கள்” என்று குரைத்தது.
இன்று அதே ஜந்து மரியானோ என்கிற மகான் கதை தெரியுமா என்று மருகுகிறது. உருகுகிறது. அவர் மட்டுமல்ல மரியானோ என்கிற மகாத்மாவுக்காக இன்று பொதுவெளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஒருவர் கூட அன்று என்மீது மரியானோ திட்டமிட்டு தொடுத்த அவதூறை கண்டிக்கவில்லை. மாறாக அவர்களும் அந்த அவதூறை ஊர் முழுக்க பரப்பினார்கள். அல்லது கமுக்கமாய் உள்ளூர ரசித்தார்கள். இன்று அந்த உத்தமர்கள் தான் அரசியல் முரண்களுக்காக தனிமனித வன்மம் கக்கலாமா என்று ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள். நீங்கள் கக்காத வன்மமா? நீங்கள் செய்யாத தனிமனித தாக்குதலா? நீங்கள் செய்யாத இணைய ரவுடித்தனமா?
நீங்கள் இன்று ஒரு நன்கு கட்டமைக்கப்பட்ட மாஃபியா கும்பலைப்போல உருவாகியிருக்கிறீர்கள். அதற்கு மரியானோவும் நீங்களும் இதுவரை பரப்பிய அவதூறுகளே சாட்சி.
இறுதியாக நீங்கள் ஏதோ உயர்த்திப்பிடிப்பதாக, பரப்புவதாக, பாதுகாப்பதாக படம்காட்டிக்கொண்டிருக்கும் திராவிடக்கொள்கை ஆதரவு நிலை என்பதும் திமுக ஆதரவு நிலை என்பனவற்றுக்கும் கூட உண்மையானவர்கள் அல்ல என்பதற்கும் நீங்கள் வெறும் திராவிட பிழைப்புவாதிகள் என்பதற்கும் மரியானோவே மிகச்சிறந்த சாட்சி.
கலைஞர் கட்டிய தலைமைச்செயலகத்தை குரங்குக்கை பூமாலையாக சிதைத்த சேலைகட்டிய சர்வாதிகாரி அதை மருத்துவமனையாக மாற்றினார். அதில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார். ஓடிப்போய் முதலில் விண்ணப்பித்தவர் திராவிடர் திலகம் திராவிட ரத்னா திராவிட பூஷணம் மருத்துவர் மரியானோ. அவரது திராவிட கரசேவை அத்தோடு நிற்கவில்லை. திராவிடச்செல்வி தந்த மிகச்சிறந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சேவையிலும் சிறப்பாக பணிசெய்தவர் சாட்சாத் மருத்துவ மகாத்மா மரியானோவே தான்.
அதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சியிலும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் போல இந்த ஆட்சியிலும் அதே செல்வாக்கோடு சேவையாற்றியவரும் இவரே தான். இதில் அதிமுக ஆட்சியில் மந்திரிக்கு நெருக்கமாக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் எப்படி திமுக ஆட்சியிலும் நீடிக்கலாம் என்று நீட்டி முழக்கிய திராவிட தத்திகள் இந்த மருத்துவ உலக திராவிட கொள்கைக்குன்று விஜயபாஸ்கருக்கு எப்படி வேண்டப்பட்டவராக இருந்தார் என்று கேள்வி எழுப்பமாட்டார்கள். ஏனெனில் நமக்குவந்தா ரத்தம். அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி என்பது இதுகளின் எழுதப்படாத கொளுகை, குந்தாணி.
இதே தமிழ்நாட்டில் இதே சுகாதாரத்துறையில் இதே சென்னையில் வைதீக பிராமணரான நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி என்பவர் எம்ஜிஆர் ஆட்சியில் ஏன் பழிவாங்கப்பட்டார் அந்த பழவாங்கலிலும் கூட அவர் கலைஞருக்கு ஆதரவாக ஏன் இருந்தார் என்கிற வரலாறெல்லாம் இந்த பிழைப்புவாத திராவிட தத்திகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் அதிமுக ஆட்சியில் ஆகக்கேவலமான ஊழல் பேர்வழியோடு நெருக்கமாக இருக்கத்தெரிந்த பிழைப்புவாத மருத்துவரை தங்களின் கொள்கை வழிகாட்டியாக கும்பிட்டு வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுகளையெல்லாம் அடுத்த தலைமுறை கொள்கைவாதிகள் என்று நம்பிய என்னை என்ன சொல்ல? இவர்கள் கைதேர்ந்த பிழைப்புவாதிகள்; வெறும் glorified குமாஸ்தாக்கள். கொள்கைவாதிகள் அல்ல.
இறுதியாக இவர்களுக்கு சொல்வதற்கு இரண்டு செய்திகள் மிச்சமிருக்கின்றன. திட்டமிட்டு அவதூறு செய்வதும் தனிமனித தாக்குதல் தொடுப்பதும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் தங்களுடன் முரண்படுபவர்கள் மீது தொடர் வன்மம் கக்குவதும் இருபுறமும் கூர்மையுள்ள கத்தி. அது ஒருநாள் உங்களையும் சேர்த்தே பதம் பார்க்கும் என்பதை இனியேனும் உணர்ந்து திருந்துங்கள். இரண்டாவது உங்கள் படிப்பு; பதவி; பணபலம்; துறைசார் அறிவு; அதிகாரபலம்; செல்வாக்கு; எண்ணிக்கை பலம்; கூட்டம் சேர்க்கும் வலிமை; கூட்டாக தாக்குதல் நடத்தும் உத்திகள் இன்னுமுள்ள எல்லாவற்றையும் விட அடிப்படை நேர்மை என்பது மிகவும் வலிமையானது. எந்த சூழலிலும் உங்களை பாதுகாக்கவல்லது. முடிந்தால் அதை கொஞ்சம் வளர்த்துக்கொள்ள முயலுங்கள். இனியேனும்.
பிகு: என் மீதான தனிமனித தாக்குதலில் நீங்கள் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவரான கலைஞரின் மகளையும் சேர்த்து இழிவுபடுத்தத்துணிந்த உங்களை இனிமேல் திராவிட சங்கிகள் என்றே அழைக்கப்போகிறேன். அதுவே உங்களுக்கு பொருத்தமான பெயர். அவர்கள் தான் மோடிக்கு ஆதரவாக சுஷ்மாசுவராஜையே மிகக்கேவலமாக அவதூறு செய்த கயமையில் ஈடுபட்டவர்கள். நீங்களும் அந்த அளவுக்கு கேவலமானவர்கள் என்பதால் என்னளவில் நீங்கள் இனி மேல் திராவிட சங்கிகளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக