சனி, 24 ஆகஸ்ட், 2019

காவேரி தொலைக்காட்சி மூடப்படுகிறது .. ? ஊடகங்கள் மீது பாசிசம் படர்கிறது ?

Rajasangeethan : அண்ணாநகரில் உள்ள காவேரி தொலைக்காட்சி நிறுவனரின்
அலுவலகம் முன் ஊழியர்கள் தர்ணா.
கொடுக்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை கேட்கச்சென்ற ஊழியர்களை தள்ளிவிட்டு, ‘என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ... எவன்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ. இங்கேயே கிடந்தாலும் பரவால்ல. வாட்ச்மேனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் எனக்கு மிச்சம்!’ என திமிருடன் பதிலளித்துவிட்டு, காரில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.
அநியாயமாகவும் சட்டத்துக்கு புறம்பாகவும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை ஒரு நாளில் வேலையை நிறுத்தியது மட்டுமல்லாமல், ஊதிய பாக்கியை கொடுக்க கேட்டதற்கு அலைக்கழிக்கப்பட்டிருக்கின்றனர்.
செய்திகளை கொடுக்கும் ஊடகத்தில் இருப்பவர்களை பற்றிய செய்தியே வெளியே தெரியாத நிலைதான் இங்கு யதார்த்தம்.
வேலை நிமித்தமாக இப்பிரச்சினையை இன்று பேச வராத எந்த ஊடகத்தினனுக்கும், ஒரு முதலாளி வீட்டுவாசலில் வாட்ச்மேனாக நிற்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

StandWithCauveryTVEmployees
StandForEmployeeRights
SpeakUpMedia
 Rajasangeethan


மகிழ்நன் பா.ம

காவேரி நியூஸ் ஊழியர்களின் முதல்கட்ட போராட்டம் வெற்றி...
காவேரி நியூஸ் நிர்வாகத்தின் அடாவடி செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் சுமார் 15 பேர் சுமார் 7 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். நிர்வாகம் தரப்பிலும் போலீசார் தரப்பில் பல சமரசங்கள் பேசப்பட்ட போதிலும் அனைவரும் நமது கோரிக்கையில் உறுதியாக இருந்தோம். அதன் விளைவாக நாம் கேட்டுக்கொண்டபடி, ஜூலை மாத ஊதியம் 31ஆம் தேதிக்குள்ளும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 10 ஆம் தேதி வரையிலான ஊதியம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள்ளும் வழங்கப்படும் என நிர்வாக இயக்குனர் திரு.இளங்கோவன் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் காவேரி தொலைக்காட்சியின் அடுத்த நிலை குறித்து, அதாவது சேனல் கைமாறினால் நமக்கு மீண்டும் வேலை உறுதி செய்வது அல்லது சேனலை மூடும் பட்சத்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியத்தை இழப்பீடாக வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேதி ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதன்படி செப்டம்பர் 14ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கான தேதியையும் எழுத்துப்பூர்வமாக பெற்றுள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..
போராடிய ஊழியர்களுக்கு மதிய உணவுக் கொடுத்து உதவியதோடு, நமது கோரிக்கைகளுக்காக இறுதி வரை உடனிருந்து பேச்சுவார்த்தை நடத்திய மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையத்திற்கும், வெளியிலிருந்து ஆதரவு அளித்த மற்ற பத்திரிகை அமைப்புகளுக்கும், சமூக வலைதளங்களில் எங்களுக்காக குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
எந்தவித சமரசத்திற்கும், மிரட்டலுக்கும் அடிபணியாமல் கோரிக்கையில் உறுதியாக இருந்து அதனை வென்றெடுத்த காவேரி நியூஸ் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு நன்றிகளுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.💐💐💐💪🏼💪🏼💪🏼
இப்படிக்கு
காவேரி நியூஸ் ஊழியர்கள்


கருத்துகள் இல்லை: