திங்கள், 19 ஆகஸ்ட், 2019

கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் உயிரழப்பு வீடியோ


மாலைமலர் : துறையூரில் கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 17 பேருடன் ஒரு லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோ திடீரென சாலையின் அருகில் இருந்த கிணற்றுக்குள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் பரிமாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
கோவில் திருவிழாவிற்காக லோடு ஆட்டோவில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: