செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

வேலூரில் 40 வேளாங்கண்ணி யாத்திரிகர்களை தாக்கிய இந்து முன்னணி ரவுடிகள் வீடியோ


Shalin Maria Lawrence : வருடா வருடம் ஆகஸ்ட் மாதம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு நடைப்பாதையாக மக்கள் செல்வது வழக்கம்.இதில் சிறப்பு என்னவென்றால் இதில் செல்லும் பாதி பேர் ஹிந்துகள்தான்.அதுவும் இல்லாமல் எந்த வித கூச்சலும் மக்களுக்கு இடையூறும் இல்லாமல் மிக அமைதியாக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகள் இந்த பாதயாத்திரையை மேற்கொள்ளுகின்றனர்.
பொதுவாக அவர்கள் போகும் வழிகளில் அவர்களுக்கு உணவு அளித்து உபசரிப்பது ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும்தான்.
அவர்கள் தங்குவதும் தர்கா ,கோவில்களில் தான்.
இப்படி சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழுகிறது இந்த நிகழ்வு.
ஆனால் நேற்று கோலார் தங்கவயலில் இருந்து இருந்து இப்படி அமைதியாக புறப்பட்ட 40 பாதயாத்திரிகளை தமிழகத்தின் வேலூரில் கடுமையாக அடித்து தாக்கி, அவர்கள் உடமையை சூறையாடி அவர்கள் கொண்டு சென்ற சிறு மாதா சிலையை உடைத்து இருக்கிறாரார்கள் ஹிந்து முன்னணியினர்.

போலீஸ் வந்து இந்த தீவிரவாத கும்பலை கைது செய்யும்போது "இவர்கள் மதம் மாற்றும் கோஷ்டி ,இவர்களிடம் இருந்து எங்கள் தாய் மதத்தை காப்பாற்றுகிறோம் என்று தர்ணா செய்து இருக்கிறது இந்த கும்பல்.
இந்தியா முழுவதும் சிறுபான்மையினர் தாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுதும் தமிழ்நாடு எங்களுக்கு பாதுகாப்பான ஓர் இடம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் மனம் நொந்து போகும் படி தமிழ்நாடு சிறுபான்மையினருக்கு எதிராக திரும்பிக் கொண்டிருக்கிறது .அரசும் இதை வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தின்படி இந்த நாடு மதச்சார்பற்றது. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் தாங்கள் விரும்பிய மதத்தை ஏற்றுக் கொள்ளவும் அதன்படி வழிபாட்டு முறைகளை செய்யவும் உரிமை உள்ளது.
அமைதியான முறையில், பாகுபாடு காட்டாமல் யார் வேண்டுமானாலும் தங்கள் மத சடங்குகளை நடத்திக் கொள்ளலாம் என்கின்ற உரிமையை இந்த நாடு எனக்கு வழங்கி இருக்கிறது.
இங்கே விநாயகர் ஊர்வலம் செல்ல முடியுமானால் பக்ரீத் ஊர்வலங்களும் வேளாங்கண்ணி மாதா பாதையாத்திரைகளும் செல்ல முடியும் தானே?
அப்படியிருக்க இந்த மோசமான மதத் தீவிரவாதிகளின் தாக்குதல் இந்திய அரசியலமைப்பை கேலிக்குள்ளாக்குகிறது.
அந்த 40 பேர் மட்டுமல்ல இன்னும் பல லட்சம் மக்கள் இந்த மாதம் வேளாங்கண்ணிக்கு நடை பாதையாக சென்று கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை இந்த அரசுதான் வழங்க வேண்டும்.
அப்படி வழங்காத பட்சத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்து சமூக மக்களும் இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.
ஏனென்றால் இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலேயே தடுக்க வில்லை என்றால் வடக்கில் இஸ்லாமியருக்கு நடக்கும் அதே கொடுமைகள் இங்கேயும் சிறுபான்மையினருக்கு தொடர்ந்து நடக்கும் படி ஆகிவிடும்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த செய்தியை வடமாநிலத்தை சேர்ந்த அனைத்து ஆங்கில செய்தி சேனல்களும் ஒளிபரப்பி இருக்கின்றன ஆனால் தமிழகத்தில் எந்த ஊடகமும் இதைப்பற்றி போடவில்லை.
வன்மையான கண்டனங்கள்.
இந்த தாக்குதல் குறித்த காணொளி முதல் கமெண்ட்டில்.

கருத்துகள் இல்லை: