செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

நிர்மூலமாக நிற்கும் நீலகிரிப் பழங்குடிகள்!" வீடியோ


மின்னம்பலம் -நரேஷ் : சிறப்புக் கட்டுரை: ஒவ்வொரு பழங்குடியும் ஒரு வனம். ஒரு பழங்குடி இறந்தானா நூறு மரம் இறந்துடுச்சுன்னு பொருள். நீலகிரியில பழங்குடிகள் தனித்துவிடகொள்ளாத நீலகிரியின் வன மனிதர்களைப் பற்றிப் பேசத்தொடங்கினார் பேராப்பட்டிருக்காங்க” என்று எந்த ஓர் ஊடகமும் கண்டுசிரியர் போ.மணிவண்ணன். பேரிடர் காலங்களின்போது, சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்களின் நிலையைப் பார்த்து ‘உச்சு’ கொட்டிவிட்டு நகர்வது நம் வழக்கமாக இருக்கிறது. ஆனால், அவர்கள் பொறுத்துக்கொண்டிருக்கும் சிரமங்களை நம்மால் ஒரே ஒரு நாள்கூட பொறுத்துக்கொள்ள முடியாது. வெள்ளத்தால் வீசியெறியப்பட்ட பாத்திரங்களை விலக்கிக் கொண்டு அக்குடியிருப்பை அடைந்தோம். கூடலூரிலிருந்து முதுமலை வனத் துறை சோதனைச்சாவடி செல்லும் வழியில் இருக்கிறது தொறப்பள்ளி எனும் பணியர் பழங்குடியினர் குடியிருப்பு. நெடுஞ்சாலையிலிருந்து நெடுந்தொலைவில் அமைந்திருக்கிறது அவ்வூர். நெடு வாகனங்கள் நெருங்க முடியாத பாதை. ஒரு சிற்றாற்றின் அருகிலிருந்ததால் முக்கால்வாசி மூழ்கடிக்கப்பட்ட குடியிருப்பு அது.
அப்போது அம்மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். கருத்தில்கொள்ளப்பட்டனர். கவனிக்கப்பட்டனர். மழையும் வெள்ளமும் ஊடகங்களின் செய்தி தாகமும் தணிந்த பிறகு, முகாம்கள் மூடப்பட்டன. இதை இவ்வளவு அழுத்தமாகச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பெட்டா குரும்பா எனும் பழங்குடி இனத்திலிருந்து படித்து, பட்டம் பெற்று, இன்று அம்மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் சூழலியல்வாதியான ஷோபா, அக்காரணத்தை காட்டமான வார்த்தைகளில் விளக்கினார். “இந்த மீடியால சொல்லப்படுற ஏரியாக்களுக்குத் தான் முக்கியத்துவம் இருக்கு. மத்த இடங்களிலெல்லாம் அவசரக் கால உதவி மட்டும்தான் கிடைச்சிருக்கு. பேச்சு மாறுனதும் செஞ்ச வேலைகளைக்கூட அப்படியே விட்டுட்டு அடுத்த வேலைக்குப் போயிட்டாங்க. அதுவும் பழங்குடியினர் குடியிருப்புகள் எல்லாம் முழுமையா கைவிடப்பட்டிருக்கு. அவங்க காட்டுல கட்டி வாழ்ந்த வீடுகள், குகைகள் கூட இவ்வளவு ஒழுகாது. அரசாங்கம் கட்டி குடுத்த வீடுகள் எல்லாம் இன்னிக்கு எதுக்குமே லாயக்கில்லாம போயிடுச்சு.இதுதான் அரசாங்கம் ஏற்படுத்திக் குடுத்த வளர்ச்சி.”

நாம் சென்றிருந்த நேரத்தில், தொறப்பள்ளி பழங்குடியினர் குடியிருப்புக்கு சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் உணவு, தார்பாலீன் போன்ற அவசர தேவைக்கான பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் யார், எவரென்று அம்மக்களும் கேட்கவில்லை, அவர்களும் சொல்லவில்லை. பெயர்கூட தெரியாத முகங்கள் முழுமனதுடன் உதவிக்கொண்டிருந்தன. ஸ்டிக்கர் இல்லாத துணிப் பைகளில் அத்தியாவசியங்கள் விநியோகிக்கப்பட்டன. இவ்வாறான மனிதங்களால்தான் இன்னும் இம்மனிதர்கள் நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பொருட்கள் விநியோகம் முடிந்தபிறகு நம்மிடம் பேசினார் தர்மராஜ். அவர் அக்குடியிருப்பின் ‘செய்தி தொடர்பாளராகவே சோடிக்கப்பட்டிருந்தார்.

“மூங்கிலும் மண்ணும்தான் சார் எங்க வூடு. சாதாரண மழைக்கே கரைஞ்சிடும். இதுல வெள்ளத்தைப் பத்தி சொல்லித்தான் தெரியணுமா. இந்தா, நீங்களே பாக்கீயல்ல? எல்லாம் மொத்தமா கரைஞ்சு ஓடிருச்சு. மொதல்ல இருந்து கட்டணும். காட்டுல இருந்தவரைக்கும்கூட இவ்ளோ பிரச்சினை எங்களுக்கு வந்ததில்லை.
காப்பாத்தறோம், காப்பாத்துறோம்னு மலையோட எல்லைக்கே எறக்கிக் கொண்ணாந்து இன்னிக்கு உசுருக்காக ஒண்டிக்கிட்டிருக்கோம். திரும்ப வீடு கட்டிக்க காட்டுல இருக்க மூங்கிலக்கூட தைரியமா போய் எடுத்தார முடியல. அதுக்கு வனத் துறைக்காரங்க கண்டபடி ஏசுதாங்க. என்ன பொழப்போ...” என்றுவிட்டு எடுத்துவந்த மூங்கில்களைச் செதுக்க ஆரம்பித்தார்.
நீலகிரியில் இருக்கும் பல்வேறு பழங்குடியினர் குடியிருப்புகளின் நிலை இதுதான். விளிம்பில் இருப்பவர்களுக்கே ’உச்’ மட்டும்தான் எனும்போது, விளிம்பின் விழியில் மறைக்கப்பட்டிருக்கும் இம்மனிதர்களுக்கு நம் மனிதத்தின் முனகல் கூட கேட்காது.
இன்றுவரை விடாமல் விரட்டி வருகிறது மழை. விரைந்து உதவி வேண்டும். உதவ வேண்டும்.

கருத்துகள் இல்லை: