வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை ஸ்ரீநகர் செல்கின்றனர் ... ராகுல் காந்தி உள்ளிட்ட


மாலைமலர் :  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகருக்கு நாளை செல்கின்றனர் என தகவல் வெளியானது. ஸ்ரீநகர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே, இந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். அப்போது, அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்து டெல்லிக்கு திருப்பி அனுப்பினர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகருக்கு நாளை செல்கின்றனர் என தகவல் வெளியானது.

இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சிபிஐ கட்சியின் ராஜா, சிபிஐ. எம்.மின் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை: