வியாழன், 26 அக்டோபர், 2017

காஞ்சிபுரம் போலீஸ் விரல்களை வெட்டி, எலும்புகளை நொறுக்கி கொடூர சித்ரவதை செய்தது!

தீக்கதிர :  சென்னை, அக்.25 : ஷேக் ஷாகுல் ஹமீது மீது கொலைவெறித் யது மகனான ஷேக் ஷாகுல்ஹமீது என்பவரை, காஞ்சிபுரம் காவல் நிலைய அதிகாரிகள் 26.08.2017 அன்று பண்டாரவடைக்கு வந்து கைது செய்து காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
தாக்குதல் நடத்திய காஞ்சிபுரம் காவல் நிலைய அதிகாரி களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மைமக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகம்மது பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் விடுத்துள்ள செய்தி வருமாறு:தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம், பண்டாரவடை என்ற ஊரைச் சேர்ந்த நூர்பாட்சா என்பவரின் 21 வ
எனவே, அவருடைய தந்தை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதன் பிறகு நடைபெற்ற விசாரணையில் 31.08.2017 அன்று, பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஷேக் ஷாகுல் ஹமீது சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அன்று இரவே 9.30 மணிக்கு அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், அடுத்தநாள் காலை 4.30 மணிக்குத்தான் அவருடைய பெற்றோருக்குத் தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கிறார்கள்.பெற்றோர்கள் நேரில் பார்க்கும் போது தான் ஷேக் ஷாகுல் ஹமீது காவல் நிலையத்தில் மிக மோசமாகச் சித்ரவதை செய்யப்பட்டது தெரிய வந்தது.
ஆட்கொணர்வு மனுவின் மீது உயர்நீதிமன்றம், அவருக்குத் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.தனியார் மருத்துவமனை கொடுத்த அறிக்கையில் அவருடைய கை விரல்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் கால் எலும்புகள் உடைக்கப்பட்டதாகவும், இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டதாகவும் அறிக்கை கொடுத்துள்ளது. இதன் பேரில், ஆய்வு செய்த உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் காவல் அதிகாரிகளின் கொடூரத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். விசாரணை நியாயமாக நடப்பதற்கு ஏதுவாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ஷேக் ஷாகுல் ஹமீதுக்கு அரசு செலவில் முழுமையான, தரமான சிகிச்சை கொடுக்க வேண்டும், அவருடைய குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தீக்கதிர்

கருத்துகள் இல்லை: