webdunia : கன்னட நடிகை ஒருவருடன் பிரபல மடாதிபதி உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கர்நாடகாவில் 500 வருடங்கள் வரலாற்று
சிறப்பு மிக்க ஹுனாசமரனஹலி சமஸ்தான பீடத்தின் தலைமை மடாதிபதியான பர்வதராஜ
சிவச்சார்யாவின் மகனான தயானந்தா மற்றும் குருநாஞ்சேஸ்வர சிவச்சார்ய சுவாமி
ஒரு நடிகையுடன், ஒரு அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ இன்று வெளியானது.
மடத்தினுள்ளே உள்ளே அறையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.;இதைக்கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள், அந்த
மடத்தின் முன்பு ஒன்று கூடி தலைமறைவாக உள்ள தயானந்தாவை வெளியே வருமான
குரல் எழுப்பினர். ஆனால், அது தான் இல்லை என தயானந்தா மறுப்பு
தெரிவித்துள்ளார். அந்த நடிகை சிவமோகா என்ற பகுதியை சேர்ந்த அந்த >மடத்திற்கு சொந்தமான இடத்தை சில
லட்சங்களுக்கு தயானந்தா விற்றுள்ளார் என்ற புகார் ஏற்கனவே அவர் மீது
இருக்கிறது. இந்நிலையில், இந்த பாலியல் புகாரில் அவர் சிக்கியுள்ளார்.
இவரின் தந்தையும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக ஏற்கனவே புகார்
எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக