Surya Xavier : நேற்று பிக்பாஸ் நிறைவு விழாவை.
பார்க்க வேண்டும் என பார்த்தேன்
கமல் நிச்சயம் அரசியல் மாதிரி எதாவது பேசுவார் என எனக்குள் ஒரு அசரீரி ஒலித்தது
அவர் அதே போல் உணர்ச்சி பிழம்பாய் மாறி பேசவும் செய்தார்
அவர் இப்படித்தான் பேசுவார் எனவும் எனக்குள் ஒரு அனுமானம் இருந்தது,
அப்படித்தான் பேசினார். அதில் உச்சகுரலில் அவர் சொன்ன ஒரு வார்த்தையை யாரும் கவனித்தார்களா என தெரியவில்லை,
ஏனெனில் அதையொட்டிய பதிவுகள் எதுவும் இதுவரை இல்லை,
நான் மக்களுக்காக "தொண்டரடிபொடி"யாய் பணியாற்றுவேன் என்பது தான் அவர் உச்சகுரல் தொண்டரடிபொடி என்றால் என்ன?
வைணவ ஆழ்வார்களில் பத்தாவது (தசரா) ஆழ்வார் பெயர்
தொண்டரடிப்பொடி ஆழ்வார். நூறு நாள் நிகழ்ச்சி என்பதை 99 வது நாளிலேயே நூறாவது நாள் என்றதும் கூட விஜயதசமி சார்ந்த சிந்தனையே
திருவரங்கம் அரங்கநாதருக்கு தொண்டரடியாய் இருந்து சேவை செய்ததால் அவருக்கு தொண்டரடிபொடி எனப் பெயர் வந்தது. இன்றுவரை பெருமாளுக்கு பள்ளியெழுச்சி பாடல் பாடப்படுவதை எழுதியதும் இந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் தான்
ஒருவர் தான் சார்ந்த மதம் சார்ந்த சொல்லைப் பயன்படுத்தி பேசுவது அவர் விருப்பம். தன் வாழ்நாள் முழுமையும் மதம் சார்ந்த செயல்பாடுகளோடும் சிந்தனையோடும் இருப்பவர்களுக்கே அத்தகைய வார்த்தை பிரயோகம் வந்து சேரும்
கமல் தான் ஒரு வைணவர் என்று சொல்லிவிட்டுப் போனால் இங்கு யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால் உள்ளுக்குள் ஒரு பார்ப்பனிய சிந்தனையோடு வாழ்ந்து கொண்டு வெளியே கடவுள் மறுப்பாளராக தன்னைக் காட்டிக் கொள்வது பார்ப்பனியம் காலங்காலமாக மக்களை ஏமாற்றும் செயல்களில் ஒன்று
நீங்கள் வைணவத்திற்கு தொண்டரடிபொடியாக வேண்டுமானால் இருத்துவிட்டு போங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் ஆண்டாண்டு காலமாக அரசுகளின் கோர தாண்டவத்தால் அனுதினம் செத்துக் கொண்டிருக்கும் மக்களை ஆழ்வாராக மாறி மீண்டும் கொன்றுவிடாதீர்கள் கமல்
ஏனெனில் ஆழ்வார்கள் வரலாற்றைப் படித்தால் அங்கு சமண பௌத்தர்களின் விலா எலும்புகள் வெடித்து கிடந்ததே கண் முன்னால் வந்து போகிறது
படத்தில் உள்ளவர் தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக