Sukirtha Rani : 'விழித்திரு'
திரைப்பட விழாவில் டி.இராஜேந்தர் தன்ஷிகாவிடம் கேள்வி கேட்பதும் நீ என
ஒருமையில் பேசுவதும் விளக்கம் கொடுக்க முற்பட்ட தன்ஷிகாவைப் பேசவிடாமல்
தடுத்து குரலை உயர்த்தி அவரை அமர வைப்பதும் புடவை உடுத்தாமல் வந்து
சாரி(மன்னிப்பு) கேட்கிறாய் எனக் கலாச்சாரக் கமிஷ்னராய் கருத்து
உதிர்த்ததும் அப்போது இராஜேந்தரின் உடல்மொழியும் ஆணாதிக்கத்தின்
அநாகரிகத்தின் ஆண்திமிரின் உச்சம்..அவர் பேசுவதைக் கண்டிக்காமல்
மேடையிலும் அரங்கத்திலும் அமர்ந்துகொண்டு வெடிசிரிப்புச் சிரித்துக்
கொண்டிருந்தவர்கள் அவரைவிட நாகரிகம் துளியும் அற்றவர்கள்.. மேடையில் ஒரு
பெண்குரலைப் பேசவிடாமல் நெரித்த இவர்களையும் இவர்களின் கீழ்த்தரமான
செயலையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக