kirubamunusamy : காதலில்
ஏமாற்றப்படுவதாக பெண்களை சாடி வந்த பாடல்களை தொடர்ந்து விமர்சித்து
வந்ததன் விளைவாக, பொதுவாக பெண்களை சாடுவது குறைந்து, உன்னை மட்டும்
என்றானது. இன்றோ, குறிப்பிட்ட அந்த பெண்ணின் பெயர், விலாசம் ஆகியவற்றை கூறி
திட்டும் பாடல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.
இதிலிருந்து இவர்கள் சொல்ல விளைவது என்ன? ஒரு முறை காதலில் விழுந்து விட்டால் அந்த உறவை பெண்ணானவள் முறிக்கவே கூடாது என்றா? இது கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமைவாதத்தை முன்வைப்பதாகவே இருக்கிறது.
ஒருவர் மீது ஏற்படும் காதல், எந்த காரணத்திற்காகவும், எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அது வாழ்நாள் முழுவதும் நிலைபெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. இது இருபாலருக்கும் பொருந்தும்.

காதல் முறிவோ அல்லது திருமண முறிவோ ஏற்படும் போது அதில் தன் பங்களிப்பை
உணராது, அதற்கான முழு பொறுப்பையும் ஒரு ஆணின் தலையில் சுமத்துவதை எப்படி
கண்டிக்கின்றோமோ, அதுபோலவே ஆண்களும் அம்முறிவில் தங்களுக்கு இருக்கும்
பங்கையும், பொறுப்பையையும் உணர்தல் அவசியம்.
ஆனால், காதல் என்ற பெயரில் அடுத்தவரை ஏமாற்றி, சுரண்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பால் பேதமில்லை.
ஆக, இனியாவது காதல் தோல்வி என்ற பெயரில் பெண்களை மட்டுமே பொறுப்பாக்கி, அவர்கள் மீது வெறுப்பை உமிழும் பாடல்களை தவிர்ப்போமாக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக