நக்கீரன் :நீட்
தேர்விற்கு தமிழகத்தில் தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தமிழகம்
முழுவதும் இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் அக்ககட்சியினர் அண்ணா சாலையில்
ஆரம்பித்து தேனாம்பேட்டை அன்பகம் வரை நீண்ட வரிசையில் நின்று மத்திய,
மாநில அரசுகளுக்கு என் எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில்
தயாநிதி மாறன் ஜெ.அன்பழகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.வட சென்னையில் கூட்டணி தலைவர்களுடன் பேராசிரியர்.க.அன்பழகன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.திருவள்ளுரில்
திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற மனித சங்கிலி
போராட்டத்தில் மாவட்ட செயலாளர் நாசர் பரந்தாமன், திருவள்ளுர் எம்எல்ஏ
ராஜேந்திரன், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் கலந்து கொண்டனர்.
இது தவிர காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சிதம்பரம், சமத்துவ மக்கள்
கழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் அமைப்புகள் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.
திருவள்ளுர் சிவிநாயூடு சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளுர் சிவிநாயூடு சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படங்கள்: ஸ்டாலின், அசோக், தேவேந்திரன்
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
* Indicates mandatory fields
|
Name * | : | Email Id * | : | Left: Press Ctrl+g to toggle between English and Tamil | Comment * (500) | : |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக