வெள்ளி, 28 ஜூலை, 2017

தலித் இளைஞர் சாதிவெறியர்களால் வெட்டி படுகொலை.புளியரம்பாக்கம் .. திருவண்ணாமலை மாவட்டம்

செய்யாறு அருகே தலித் இளைஞர் சாதிவெறியர்களால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே புளியரம்பாக்கம் தலித் மாணவர்கள் இளைஞர்கள் 23.7.2017 அன்று சித்தேரியில் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த செலலபெருபுலிமேடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தலித் மாணவர்களை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் 4 மணிக்கு தலித் பகுதிக்கு வந்த செல்லபெரும்புலிமேடு வாலிபர்கள் தலித் மக்களிடம் தகறாரு செய்துள்ளனர். அங்கிருந்த மக்கள் அவர்களை காவல்நிலையத்தில்
. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜோதி அலட்சிய போக்குடன் நடந்ததன் விளைவு தங்கள் கிராமத்திற்கு சென்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கத்தி, இரும்பு ராடு போன்ற ஆயுதங்களுடன் தலித் பகுதிக்குள் புகுந்து கண்ணில் பட்ட அனனவரையும் தாக்கியுள்ளனர். இதில வெங்கடேசன், ஆதிகேசவன் த/பெ மாதவன் அடித்து இழுத்துச்சென்று இறந்து விட்டார் என்று தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். வெங்கடேசன் சென்னை அரசு மருத்துவமனையில் இறந்துள்ளார். இச்சம்பவத்தில் வீடுகள், மளிகை கடை, இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தினர்.

எனவே கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலைவழக்காக பதிவு செய்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு உதவி ஆய்வாளர் ஜோதிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லையெனில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக அமைப்புகளை இணைத்து பெரும்போராட்டத்தை முன்னெடுப்போம். சாதிவெறியை சவக்குழிக்கு அனுப்புவோம்.
ஜெய்பீம் லால்சலாம்..
Cpm Selvan
மாவட்டச்செயலாளர்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி

கருத்துகள் இல்லை: