சிஏஜி எனப்படும் மத்திய அரசின் தணிக்கைத் துறை தரும் அறிக்கையானது முழு நம்பிக்கைக்கு உரியது அல்ல.
அதனால்தான் அது 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் 1.78 லட்சம் கோடிகள் இழப்பு என்று ஒரு மோசமான பொய்யைச் சொன்னது. அதைக்காட்டிலும் பயங்கரத்தைத்தான் ஊடகங்களும், காங்கிரஸ் & திமுகவை வெறுத்த அறிவுஜீவிகளும் செய்தது. ஆமாம் அதை அப்படியே ஊழல் செய்யப்பட்டத் தொகை என மக்களை முழுமையாக நம்ப வைத்தது.
ஜெயா டிவியெல்லாம் இன்றைய தேதி வரை 1.78 லட்சம் கோடிகளை, ரவுண்ட் ஆஃப் செய்து 1.80 லட்சம் கோடி ஊழல் செய்த திமுக என்றே சொல்லும்.
யாரை வேண்டுமானாலும் கேளுங்கள், 2 ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடைபெற்ற ஊழல் தொகையின் அளவுதான் அது என்று அடித்துச் சொல்வார்கள். அப்படி மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதே சி ஏ ஜி நேற்று ஓர் அறிக்கை அளித்துள்ளதாம். அதைப்பற்றி எந்த சங்கிகளாவது குரல் கொடுத்தார்களா ? கமுக்கமாக அதைக் கடந்து போயிருப்பார்கள். எளிய வியாபாரி எவராவது எங்களுக்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி எஸ் டியால் ஏகப்பட்ட இழப்பு என்ற மாத்திரத்தில், நீ திருடன், அதான் இதுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிற ? முடியுமா ? இனி நீ ஒழுங்கா கணக்கு காமிச்சி டேக்ஸ் கட்டலைன்னா களிதான், மோடிடா எனும்கள்.
ஆனால், நாம் யாரெல்லாம் ஒழுங்காக பில் போடுகிறார்கள், மிகச் சரியாக வரிகளை வசூல் செய்கிறார்கள், சரியாக அதை அரசுகளுக்குச் செலுத்தி விடுவார்கள் என நம்புகிறோமோ, அந்த மல்ட்டி நேஷனல் கம்பெனிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள்தான் வரிகளை கோடி கோடியாய் நம்மிடம் விலையில் போட்டு வாங்கிவிட்டு அதை அரசுக்கு கட்டாமல் ஏய்ப்புச் செய்வார்கள் எனக் கண்கூடாக பல கண்டிருக்கிறோம். உதாரணத்துக்கு சென்னை நோக்கியா கம்பெனி 2000 கோடிகளுக்கு மேல் வரிகளைச் செலுத்தாமல் தமிழக அரசை ஏமாற்றிவிட்டு ஓடியது. வோடஃபோன், ரிலையன்ஸ் எல்லாம் பலப்பல கோல்மால்கள் செய்த கம்பெனிகள். இவர்களுக்கு வாதாட சிதம்பரம், நளினி, கபில்சிபில், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் & ஃபேம்லி என வரிசையில் நிற்பார்கள்.
சரி, மேட்டருக்கு வருவோம். ஏர்டெல், ஐடியா, ரிலையன்ஸ், வோடபோன், ஏர்செல், சிஸ்டிமா போன்ற ஆறு தொலைத் தொடர்பு கம்பெனிகள் மட்டும், 2010 - 2015 வரைக்குமான தங்கள் கணக்குகளில், 61061 கோடிகள் வரை, குறைவாக கணக்கு காட்டி இருக்கிறார்கள், அதாவது வருடத்திற்கு 12 ஆயிரம் கோடிகள் ஸ்வாஹா. ஆறு கம்பெனிகளாக இந்த 12 ஆயிரம் கோடிகளைப் பிரித்தால், ஒரு கம்பெனி வருடத்திற்கு சராசரியாக 2000 கோடிகள் வரவைக் குறைவாகக் காண்பித்து, அதற்கான வருமான வரி மற்றும் நம்மிடம் வசூலிக்கப்பட்ட பல்வேறு வரிகளை அரசுக்குச் செலுத்தாமல் வாயில் போட்டிருக்கிறார்கள். அது எவ்வளவு தெரியுமா ?
7698 கோடிகள். அரசுக்கு நிகர வருவாய் இழப்பு.
ஏன் இவர்களை ஒன்றுமே செய்ய முடியாதென்றால், இவர்கள் தங்களின் தொலை தொடர்பு சேவை விளம்பரங்களுக்கு நாட்டு பிரதமைரையே மாடலிங் செய்ய வைக்க வல்லவர்கள். எவன் கை வைப்பான் ? வச்சா நிதி அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், முன்னாள் உள்துறை அமைச்சர்ன்னு வரிசைக் கட்டில்ல வாராய்ங்க இவங்களுக்கு பரிந்து வாதாட ??
சிஏஜி அறிக்கை சொல்வதை அப்படியே ஏற்கப்போவதில்லை. இருந்தாலும் இதற்கான உண்மைக் கணக்கை எப்படியும் இந்தத் தொலை தொடர்பு நிறுவனங்கள் நமக்குச் சொல்லத்தான் போகின்றன, பார்ப்போம்.
ஆனால் அவர்கள் அப்படிச் சொல்ல, அண்டா பக்த்களும், மங்கி சங்கிகளும் கொதித்து எழ வேண்டும். ஆங், அதெப்படி, அவிங்களாலத்தானே நாங்களே மேல வந்தோம்ன்னு குனிஞ்சாய்ங்கன்னா கதை கந்தல்.
அதைவிட மோசமான ஒரு ப்ளாஷ் சேதி. அதே சி ஏ ஜி வீசிய இன்னொரு அதிபயங்கர அணுகுண்டு.
மோடி ஆட்சிக்கு வந்தபின் பாதுகாப்புத்துறை மிக மிகக் கேவலமாக மெய்ண்டெய்ன் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை சீனாவுடன் போர் ஏற்பட்டால் பத்து நாட்களுக்கு போரிடக் கூட குண்டுகள், ஏவுகனைகள் நம் ராணுவம் வசம் கிடையாதாம் :(
(தகவல் உபயம் - தமிழ் இந்து)
From Raja Rajendran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக