வியாழன், 27 ஜூலை, 2017

மீண்டும் நிதிஷ்குமார் முதல்வர் .. துணை முதல்வராக பாஜக சுசில் குமார் மோடி ..28 அமைச்சரகள் நாளை பதவி

பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து வழங்கினார். ராஷ்டீரிய ஜனதா தலைவர் லாலுபிரசாத் யாதவுடன் நடந்த மோதலையடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார்.
லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்த போது முறைகேடுகள் செய்து சொத்துக்கள் வாங்கி குவித்த புகார்களில் தற்போது துணை முதல்வராக உள்ள, தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது. இதனால் தேஜஸ்வி பதவி விலக நெருக்கடி கொடுக்கப்பட்டது. தேஜஸ்வி பதவி விலக நிதிஷ் கெடு விதித்திருந்தார். ஆனால் லாலு, தேஜஸ்வி பதவி விலகமாட்டார் என்றார்.


இந்த பரபரப்பான சூழ்நிலையில், நிதிஷ்குமார் கவர்னர் கேசவ்நாத் திரிபாதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் நிதிஷ்குமார் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரும் நிதிஷ்குமாரின் ராஜினாமா மனுவை ஏற்றுக் கொண்டார்.

இதனிடையே, பீகார் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சுஷில் மோடி, நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் நிதிஷ்குமார் இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார், துணை முதல்வராக சுஷில்குமார் மோடி மற்றும் 28 அமைச்சரகள் நாளை ஜூலை 25 மாலை 5 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: