முஸ்லிம்
பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்ய உறவு கொள்வது எப்படி? இதைப் பற்றி
விரிவாக கூறும் புத்தகம் அமேஸான் ஆன்லைன் வர்த்தக வலைதளத்தில் விற்பனையாகி
வருகிறது. இது தொடர்பாக சர்ச்சைகளும் சூடு பிடித்துவிட்டன.
'ஹலால்
வழியில் சுகமான பாலியல் உறவு கொள்ள முஸ்லிம்களுக்கான பாலியல் வழிகாட்டி
கையேடு' என்ற பொருள் கொண்ட 'The Muslim's Guide to Sex Manual: A Halal
Guide to Mind Blowing Sex' புத்தகத்தை, ஒரு பெண் எழுத்தாளர்
எழுதியிருக்கிறார். சர்ச்சைக்குரிய கருப்பொருளை கொண்டிருப்பதால் தனது
இயற்பெயரை வெளியிட விரும்பாத அவர் புனைபெயரை பயன்படுத்தியிருக்கிறார்.
ஆனால் பிரிட்டன் ஊடகங்கள் அந்த எழுத்தாளரை பேட்டி கண்டுள்ளன.
'த அப்சர்வர்' நாளிதழின்படி, இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் ஒரு முஸ்லிம் பெண்.
எழுத்தாளர் பற்றிய விவரங்கள் வேறு எந்த தகவல்களை வெளியிடவேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான காரணத்தையும் தனது பேட்டியில் அந்த முஸ்லிம் பெண் கூறியிருக்கிறார்.
முஸ்லிம் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக பாரம்பரிய நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய உறவு பற்றிய தகவல்கள் தெரிவதில்லை என்கிறார்.
முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவரும் என்ற நம்பிக்கையிலேயே இந்த புத்தகத்தை எழுதியிருப்பதாக எழுத்தாளர் கூறுகிறார்.
'முஸ்லிம் பெண்களிடையே பாலியல் குறித்த தவறான புரிதல்களையும் கருத்துக்களையும் மாற்றுவதோடு, மூடநம்பிக்கைகளையும் உடைத்தெறிய இந்த புத்தகம் உதவியாக இருக்கும் என்பதால், புத்தகத்திற்கு வரவேற்பளிக்கவேண்டும்' என்று இந்த கட்டுரையின் ஆசிரியரான ஷெலீனா ஜன்மொஹம்மத், பிரிட்டன் நாளேடான `டெலிகிராஃப்`இல் தெரிவித்துள்ளார்.
புத்தகத்தின் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. பெண்களின் பாரம்பரிய நம்பிக்கைகளை குறிவைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டிருப்பதாகவும், பெண்களின் உடலை நுகர்வுப் பொருளாக பார்ப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.g>பெண்களே பிரதானம்< இந்த விமர்சனங்களை இதனை எழுதிய ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. "புத்தகத்தை பாராட்டியும், ஆதரித்தும் மின்னஞ்சல் மூலம் பரவலாக ஊக்கம் கிடைத்துவருவதாக கூறுகிறார். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இந்த புத்தகத்தை பரிசாக கொடுக்க விரும்புவதாக ஒரு மசூதியின் இமாம் எழுதியிருப்பதாக, `டெலிகிராஃப்`க்கு கொடுத்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.e>எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருப்பதாக கூறும் எழுத்தாளர் அதுவும் ஒருவகையில் பாராட்டே என்கிறார். ஏன் தெரியுமா? 'இந்த புத்தகம் பெண்களை மட்டுமே மையப்படுத்துகிறது. ஆண்களைப் பற்றி எதுவுமே சொல்லாமல், புறக்கணித்தது ஏன்?' என்பதே அந்த எதிர்மறையான விமர்சனமாம்!
மகளிர் மன்றங்களும், அமைப்புகளும் இந்தப் புத்தகத்திற்கு அமோக ஆதரவளித்திருப்பதாக கூறும் பிரிட்டன் நாளிதழ் 'த அப்சர்வர்', தாம்பத்யத்தில் ஏற்படும் அதிருப்தியால் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் திருமண உறவுகள் முறிந்து போகாமல் பாதுகாக்கவும், அவர்களின் பாலியல் உரிமையை புரிந்துக் கொள்வதற்கும் இதுபோன்ற புத்தகங்கள் அவசியம் என்றும் கூறுகிறது.
"நான் இந்த புத்தகத்திற்கு முழு மனதோடு ஆதரவளிக்கிறேன். ஏன் கூடாது?" என்று கேள்வி எழுப்புகிறார் பிரிட்டனில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பின் தலைவர் ஷாயிஸ்தா கோஹிர். பாலியல் உறவைப் பற்றி பேசுவது புதுமையானது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பாலியல் உறவில் பெண்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவுறுத்தல்களையும் ஷாயிஸ்தா கோஹிர் சுட்டிக்காட்டுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக