புதன், 8 பிப்ரவரி, 2017

பன்னீர்செல்வம் : நான் அவர்களை சம்பாதிக்க விடவில்லையா? எது செய்தாலும் கண்டு கொள்ளாமல்தானே இருந்தேன்? ops ஒப்புதல் வாக்குமூலம்!

இந்த கொள்ளைக்காரி, கொலைக்காரியிடம் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா ரத்தத்தினால் உருவான கட்சியை காக்க தனி ஆளாக நின்று போராடுவேன்
எத்தனை நாளைக்குதான் நான் அடிமையாகவே இருப்பது. இனி பதவியும் வேண்டாம். அரசியலும் வேண்டாம் என்று சென்னையை விட்டே செல்கிறேன்.
நான்செய்வது தவறா, தவறு இல்லையா என நீங்கள்தான் வழி காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஜெயலலிதாவின் சமாதியில் கண்ணீருடன் பன்னீர் தியானம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்கள்தான். உண்மைதான் அதற்காக நான் அவர்களை சம்பாதிக்க விடவில்லையா, அவர்கள் எது செய்தாலும் கண்டு கொள்ளாமல்தானே இருந்தேன்.
தாயே நீங்கள் மறைந்தவுடன் நான் ஒரு நாயாக பார்க்கப்பட்டடேன். பேசப்பட்டேன். தீண்டத்தகாதவனாக என்னை ஆக்கினார்கள்.
நீ்ங்கள் எப்படி இறந்தீர்கள் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும். அது என்னால் உணர முடிகிறது.

தாயே நீயே சொல் அவர்களை எதிர்த்து போராடட்டுமா, இல்லை எப்படியோ நாசமாக பேங்கள் என்று விட்டு விடட்டுமா.
இது போன்ற சிந்தனைகள் எல்லாம் அவா் மனதில் ஓட ஜெயலலிதா சமாதியில் கண்ணீருடன் தியானம் செய்து வந்தார். பின்னா் பத்திரிக்கையாளா்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.
அம்மா அப்போலோவில் இருந்தபோது என்னை சின்னமா சசி அழைத்தார். நானும் சென்றேன். அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. என்று என்னை அழைத்து சென்று காட்டினார்கள். அரை மணிநேரம் பேசமுடியாமல் கதறி அழுதேன்.
அப்போது அவா்கள் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் அதற்கு பொதுச் செயலாளராக அவைத்தலைவர் மதுசூதனனை  கொண்டு வரவேண்டும்.
நீங்கள் தான் முதல்வர் பொறுப்பு ஏற்க வேண்டும் எனறார்கள், எனக்கு வேண்டாம். ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்து விட்டேன்.
அப்போது அம்மா திருமபி வந்தபோது ஆட்சியை அவர்கள் கையில் கொடுத்தேன்.
இந்த நிலையில் ஆட்சி பொறுப்பு எனக்கு வேண்டாம் என்றேன். நீங்கள் ஆடசியில் இருந்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று என்னை முதல்வராருங்கள் என்றார் நானும்அம்மாவின் விருப்பம் நிறைவேறப்படவேண்டும் என்பதற்காக பொறுப்பை ஏற்றேன்.
சில தினங்களில் சுகாததாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் என்னை வந்து தலைமை செயலகத்தில் சந்தித்தார். அப்போது திவாகரன் என்னிடம் பேசவேண்டும் என்றார்.
நானும் பேசினேன். எது அக்காவை நான் ஊருக்கு கூட்டிக்கிட்டு போகட்டுமா என்றார்.
எனது அக்காவை பொதுச் செயலாளராக ஆக்குங்கள் என்றனர். நானும் சம்மதித்தேன்.
பொதுச் செயலளராக அவர்களும் வந்தார்கள். சில தினங்களில் வருவாய்த்துறை அமைச்சா் டிவி. உதயக்குமார் ஆட்சியும், கட்சியும் ஒருவர் கையில்தான் இருக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்.
அப்போது இது குறித்து சின்னம்மாவிடம் பேசினேன். அவர்களும் அவரை கண்டிப்பதாக சொன்னார்கள். பின்னா் அந்த அறைக்கு அமைச்சா் செல்லூர் ராஜூ வந்தார். என்ன அண்ணா இப்படி அவர் பேசிவிட்டார் என்று ஆதங்கப்பட்டு பேசினார்.
அவரும் மதுரைக்கு சென்றவுடன் உதயக்குமாரின் கருத்தை அவரும் பேட்டியாக கொடுத்தார்.
நான் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது அகற்றுபணி நடைப்பெற்று வந்தது. இதனைப்பார்வையிட நான் கடற்கரைக்கு சென்றேன்.
பின்னா் கோட்டைக்கு சென்று மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் அகற்றும் பணியை குறித்து பேசிக்கொண்டு இருந்தேன்.
என்னை போயஸ் கார்டனுக்கு வரச்சொன்னார்கள். சென்றேன். அங்கு சீனியா் அமைச்சா்கள், சீனியா் கட்சி நிர்வாகிகள் இருந்தனா். ஆட்சியும் கட்சியும்
ஒருவரிடம்தான் இருக்க வேண்டும். எம்எல்ஏ கூட்டத்திற்கு சென்று அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றனா்.
என்னை கட்டாயப்படுத்தி ராஜினமா செய்ய சொன்னார்கள். நான் அம்மாவின் சமாதிக்கு சென்றுவிட்டு வந்து ராஜினமா செய்கிறேன் என்று கூறினேன்.
அதற்கும் அவா்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. அம்மாவின் ஆத்மா உண்மையை சொல். கோடான கோடி தொண்டா்கள் மற்றும் பொதுமக்களுக்கு உண்மையை சொல் என்றது. அதன்படி நான் இந்த உண்மையை நான்  சொல்கிறேன்.
ஒரு நல்லவர் பொதுச் செயலாளராக வரவேண்டும். ஒரு நல்லவர் முதல்வராக ஆட்சி செய்ய வேண்டும். அதற்கு நான்தான் என்று இல்லை உண்மையான ஒரு நபர் இருந்தால்போதும்.
அம்மாவின் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தனி ஒருஆளாக நின்று போராடுவேன், இந்த கொள்ளைக்காரி, கொலைக்காரியிடம்  எம்.ஜி.ஆா். ஜெயலலிதா ரத்தத்தினால் உருவான கட்சியை காக்க தனி ஆளாக நின்று போராடுவேன் என்று கூறி தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டார் பன்னீர் செல்வம்.

கருத்துகள் இல்லை: