புதன், 8 பிப்ரவரி, 2017

அதிமுக எம்எல் ஏக்கள் லீலா பேலஸ் ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்?


அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அதிமுக கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் முதலமைச்சராக இன்னும் ஓரிரு நாட்களில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே அதிமுக ஆண் எம்.எல்.ஏ.,க்கள் பெண் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். இதில், பெண் எம்.எல்.ஏ.,க்களுக்கு அவர்களுடைய கணவர் உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆண் எம்.எல்.ஏ.,க்களுக்கு அவர்களுடன் அவர்களது மனைவி உடனிருக்க அனுமதி வழங்கப்படவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் இதே ஹோட்டலில்தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு முதல்வராவதில் ஜானகிக்கும், ஜெயலலிதாவிற்கும் இடையே போட்டி வந்த சமயத்தில். இரு தரப்பினரும் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை வெவ்வேறு ஹோட்டல்களில் அடைத்து வைத்து பாதுகாத்தனர். ஜானகி முதல்வராக இருந்தாலும், சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் முதல்வராக பதவியேற்று 24 நாட்கள் மட்டுமே பதவி விகித்து சட்டமன்றத்தை களைத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: