புதன், 8 பிப்ரவரி, 2017

Panneerselvam's Explosive interview .. முதல்வரை மிரட்டி பதவியை விட்டு விலக வைத்தது கடுமையான குற்றம் . நடவடிக்கை எடுக்கவேண்டும் .. ஸ்டாலின்

ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைத்த முதல்வரையே மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் என்றால் சசிகலா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைய ஆளுநர் ஆவன செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, தமிழக பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ், ஜெ. நினைவிடத்தில் தியானம் செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தபோது, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகக் கூறினார். 
இந்நிலையில், இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், "தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நடராஜன் செயல்படவிடவில்லை. இது என்னுடைய குற்றச்சாட்டு மட்டுமில்லை. இது தமிழக மக்களின், அதிமுக அடிமட்ட தொண்டர்களின் குற்றச்சாட்டு. ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைத்த முதல்வரையே மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் என்றால் சசிகலா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

அதிமுக ஆட்சியில் அனைத்துமே மர்மமாகவே உள்ளது
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலம் கடந்து குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். இருந்தாலும், தமிழகத்தில் தற்போது அரசே இல்லாத சூழல் நிலவுகிறது.
இத்தகைய சூழலில் அரசியல் சாசனப்படி தமிழகத்தில் ஓர் ஆட்சி அமைய ஆளுநர் ஆவன செய்ய வேண்டும்" என்றார்.TAMILTHEHINDU

கருத்துகள் இல்லை: