சனி, 22 அக்டோபர், 2016

அதிமுகவினர் சோக போஸ் கொடுத்து கொண்டே தங்க வசூலில் மும்மரம்


தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜெயலலிதா பூரண குணமடையும் வரை ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு முதல்வராக பதவியேற்றுள்ளார். சமீபத்தில் கூடிய அந்த அமைச்சரவை கூட்டத்திலும் அமைச்சர்கள் அனைவரும் சோகம் கவிழ்ந்த முகத்துடனே காணப்பட்டனர். பதவியேற்ற பன்னீர்செல்வமும் அவரது துயரத்தை குறிக்கும்வகையில் வெள்ளை தாடி விட்டபடியே ஊடகங்களின் பார்வைக்குப்படுகிறார். ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆகும்போதுதான் நமக்கு தீபாவளி என அவரது தொண்டர்கள் எண்ணி வரும் நிலையில் அமைச்சர்கள் பெயரை சொல்லி அவருக்கு நெருக்கமானவர்கள் கான்ட்ராக்டர்களிடமும், அதிகாரிகளிடமும் வியாபாரிகளிடம் தங்க நாணய வசூல் வேட்டை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: