புதுதில்லி, அக்.17-
செய்தியாளர் அர்னாப் ஸ்வாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
வழங்கப்படுவது ஏன் என்று மார்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளர். தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்தின் செய்தியாளராக பணிபுரிகிறார் அர்னாப் கோஸ்வாமிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அவருக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ, மக்களின் வரிப்பணத்தில் இருந்து அதிகம் செலவழித்து அர்னாப் கோஸ்வாமிக்கு இத்தகைய உயரிய பாதுகாப்பு வழங்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அதிக சம்பளம் வாங்கும் அர்னாப் கோஸ்வாமி தனது பாதுகாப்பிற்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், அரசு ஆயுதம் ஏந்திய 20 காவலர்களை நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது ஏன் எனவும் மார்கண்டேய கட்ஜூ வினவியுள்ளார்.
அஸ்வினிகுமார் சோப்ரா, சுதீர் சவுத்ரி போன்ற செய்தியாளர்களுக்கு “இசட் பிளஸ்” போன்ற உயரக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மார்கண்டேய கட்ஜூ, அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்பவர்களுக்கு இத்தகைய வசதிகளை அரசு செய்து தருவது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். //theekkathir.in/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக