சனி, 22 அக்டோபர், 2016

உபி ஹாவாலா அஜித் அப்போலோ வருகை ..அதன் பின் போயஸ் கார்டனில் காண்டேயினர்கள் நடமாட்டம் .. அப்புறம் மோடி அமித் ஷா ...

""ஹலோ தலைவரே, முதல்வர் ஜெயலலிதா இல்லாம, முதல் முறையா
அ.தி.மு.க அரசின் அமைச்சரவைக் கூட்டம் 19-ந் தேதி நடந்தது. தலைவர் இருக்கையில் யாரும் உட்காரலை. மேஜைமேலே ஜெ. படத்தை வச்சிட்டு, அவரே நேரில் பங்கேற்ற மாதிரி நினைச்சு மந்திரிகளெல்லாம் ஆடாம அசையாம உட்கார்ந்திருந்தாங்க.
"அமைச்சரவை கூட்டம் நடத்துற அதிகாரமுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கான அனுமதியை மன்னார்குடி தரப்பிடமிருந்து எதிர்பார்த்திருப்பதா நம்ம நக்கீரன் விரிவா எழுதியிருந்ததே?''
"ஆமாங்க தலைவரே.. வரும் 24-ந் தேதியோட உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைவதால், உள்ளாட்சிகளை கவனிக்க தனி அதிகாரிகளை நியமிக்கணும். அதற்கான ஒப்பு தலை அமைச்சரவை கூடித்தான் கொடுத்தாக ணும். அதற்குத்தான் சசிகலா அனுமதியை ஓ.பி.எஸ் எதிர்பார்க்கிறார்னு நம்ம நக்கீரன் எழுதியிருந்தது. அந்த இதழ், 18-ந் தேதி காலை, கடைகளுக்கு வந்தது. கொஞ்ச நேரத்தில், 19-ந் தேதி அமைச்சரவையைக் கூட்டும்படி அப்பல் லோவிலிருந்து அதிகாரி களுக்கு உத்தரவு வந்தி ருக்கு.'

 ""அமைச்சரவை கூடிய அன்னைக்கு சாயங்காலமே தனி அதிகாரிகள் நியமனத்துக் கான அரசாணை வெளி யாகிடிச்சே.. எல்லாம் ரெடியாத்தான் இருந்திருக்குமோ!''
 ""ஆமாங்க தலைவரே.. பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கணும். ஆனால் 22-ந் தேதி முதல்வர் ஜெ.’ அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டுவிட்டார். அதனால் அமைச்சரவை யில் ஒப்புதல் பெறப்படவேண்டிய ஃபைல்கள் எல்லாம் கிடப்பில் கிடக்க, நிர்வாகத் தேக்கமும் உண்டாச்சு.

இந்த ஃபைல்களுக்கெல்லாம் ஓ.பி. எஸ். தலைமையில் கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கு. அதேபோல், காவிரி விவகாரத்தில், சட்ட ரீதியிலான முயற்சிகளைத் தொடர்வது என்றும், நஞ்சை நிலங்களில் வீடுகட்ட முனைவோர், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பது என்றும், ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானங்களில் கையெழுத்து பெறப்பட்டது.'' ""ம்..''

""அதேபோல், ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு வழங்க, மானிய விலையில் மத்திய அரசு கொடுத்துவந்த அரிசியின் அளவை பாதியாகக் குறைத்ததோடு, விலையையும் கடுமையாக ஏற்றிவிட்டது. இதனால் ஏற்படும் இழப்பையும் தமிழக அரசே ஏற்பது என்றும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக் காங்க. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து, தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைப் பதில், சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் மோடி அரசு, தமிழகத்துக்கு மானிய விலையில் கொடுத்துவந்த ரேசன் அரிசியிலும் இப்ப கைவச்சிருக்கு. ஜெ. அட்மிட்டானதிலிருந்தே காவிரி விவகாரத்திலும் கர்நாடகத்துக்கு சாதகமா மோடி அரசு செயல்படுவதா அ.தி.மு.க தரப்பில் அதிருப்தி இருக்குது.''’’ ""கர்நாடகத் தேர்தலை மனதில் வச்சி மோடி செயல் படுறாருன்னு தமிழக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுதே! அப்பல்லோவுக்கு வர்றார்னு எதிர்பார்க்கப்பட்ட மோடி, புதன்கிழமை வரை வரலையே?'

' ""டெல்லி பா.ஜ.க. தரப்பில் விசாரிச்சேங்க தலைவரே. அமித்ஷா சகிதம் அப்பல்லோவுக்கு வந்த மத்திய நிதியமைச்சரான அருண்ஜெட்லி டெல்லிக்குத் திரும்பி மோடியிடம், சிகிச்சை பெறும் ஜெ.’வைப் பார்த்த ஒரே நபர் நான் மட்டும்தான். அவருக்குத் தரமான சிகிச்சைகள் தரப்படுது. மருத்துவமனை சொன்னமாதிரி, நீண்டகாலம் சிகிச்சை எடுக்கக்கூடிய நிலையில் ஜெ.’ இருக்கார்ன்னு சொன்னாராம். அதுக்கு மோடி, "நான் போய் அவரை சந்தித்தால், அது சம்பந்தமான படங்களை வெளியிடக் கூடிய அளவுக்கு ஜெ.வின் உடல்நிலை இருக்குதான்னு கேட்டிருக்கார். அருண்ஜெட்லியோ, இப்ப இருக்கும் சூழ்நிலையில் முடியாது. சிறிது காலமாகும்னு ஜெட்லி சொல்லியிருக்காரு. மோடியும் கொஞ்ச நாட்கள் கழித்து விசிட் அடிக்கலாமான்னு யோசித்திருக்காராம். பிரதமர் விசிட் தள்ளிப் போகிற மாதிரியே, சுப்ரீம்கோர்ட்டில் இருக்கும் சொத்துக் குவிப்பு அப்பீல் வழக்கின் தீர்ப்பும் கூட தள்ளிப்போகலாம்ன்னு டெல்லி வழக்கறிஞர்கள் வட்டாரம் சொல்லுது.'

"அப்பல்லோ டாக்டர்கள் என்ன சொல்றாங்க?''’ ""ஜெ.’ உடல்நிலை பத்தி நக்கீரன்ல வெளியிடப்படும் தகவல்கள், சரியானதாகவும், அக்கறை யோடு தரப்படுவதாகவும் அங்க இருக்கும் டாக்டர்களே சொல் றாங்க. அதோட, எங்க டாக் டர்ஸ் நேரடியா சிகிச்சைகள் அளிப்பதைக் குறைச்சிட்டோம். இப்ப முழுக்க முழுக்க, லண்டன் டாக்டர்கள்- சிங்கப்பூர் டாக் டர்கள் டீமின் ட்ரீட்மெண்ட்தான் தொடர்ந்துக்கிட்டிருக்குது. கிரிட் டிக்கல் கேர் வார்டான எம்.டி .சி.சி..யூவிலிருந்து பொது வார்டுக்குக் கொண்டுவந்து, அவங் களை நல்லபடியா வீட்டுக்கு அனுப்பிவைக்க, சவாலான மருத் துவப் போராட்டங்கள் மேற் கொள்ளப்படுதுன்னு சொல் றாங்க.''’’ ""போயஸ்கார்டன்லயும் சிறுதாவூர்லயும் ஜெ. மருத்துவ சிகிச்சையோட ஓய்வெடுக்க வசதியா, சில ஏற்பாடுகள் நடக்கறதா தகவல் வருதே?''’’ ""அதற்கான ஏற்பாடுகளும் நடந்துக்கிட்டிருக்குது. இதில் போயஸ் கார்டன்தான் முதல் சாய்ஸ். அங்க வாகனங்களின் நடமாட்டம் அதிகமா இருக்குது. லிஃப்ட்டை செட் பண்றதுக்காக வும், ஏ.ஸி. மெஷின்களை சரி பண்றதுக்காகவும் இந்த வாகனங் கள் வந்து போகுதுன்னு சொல் றாங்க. ஆனா, ஏ.சி மெஷினுக்கும் லிஃப்ட்டுக்கும் கண்டெய்னர் வாகனங்கள் எதுக்குன்னு அங்கே இருக்கிற சிலருக்கே புரியலை யாம். ராத்திரி நேரத்தில்தான் இதெல்லாம் ரகசியமா மூவ் ஆகுது.'' ""எப்போதிருந்து இப்படி மூவ் ஆகுதாம்?''

 ""அப்பல்லோவுக்கு வைகோ விசிட் அடிச்சிட்டு கவர்னரை சந்திச்சாரே, அதுக்கு முதல்நாள் இரவும், அருண்ஜெட்லியும் அமித்ஷாவும் அப்பல்லோ வந்து போனதற்கு முதல் நாள் இரவும் கண்டெய்னர்கள் நடமாட்டம் அதிகமா இருந்திருக்கு. உ.பி.யைச் சேர்ந்த ஹவாலா பணம் காண்ட்ராக்டர் அஜித், அப்பல் லோவுக்கு வந்து போயிருக்காரு. அதன்பிறகுதான் பல செயல்பாடுகள் வேகமெடுத்திருக்குன்னு சொல்றாங்க. ஏற்கனவே தேர்தல் நேரத்தில், திருப்பூர் அருகே கண்டெய்னர்ல 576 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், அருண்ஜெட்லிதான் வேகமா களமிறங்கி சாதகமாச் செயல்பட்டாரு. அப்ப இருந்த கவர்னரும் எல்லாத்துக்கும் ஒத்துழைப்பா இருந்தாரு.'' ""ஜெ.’ கார்டன்ல இல்லாத நிலையில், அங்க பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீஸ்காரங்க இருப்பாங்களே?''

""காவல்துறையின் கவனம் போயஸ் கார்டன் பக்கம் அதிகமா குவிஞ்சிருக்கு. கமிஷனர் ஜார்ஜ், அதில் ஸ்பெஷல் அக்கறை எடுத்துக்கறார். டி.சி.ஜெயக்குமாரும் அடிக்கடி கார்டனுக்குப் போறார். அவர் 5 வருடம் சென்ட்ரல் க்ரைம் பிராஞ்ச்சில் இருந்தவரு. ஆட்சியில் அ.தி.மு.க. இருந்தாலும், தி.மு.க. இருந்தாலும், தன் இடத்தை அடைந்து, செயல்வேகம் காட்டக் கூடியவர். அவர்தான் கார்டனின் மூவ்மெண்ட்டுகளை கவனிக்கிறார். மத்திய உளவுத்துறையும் எல்லா மூவ்மெண்ட்டுகளையும் உன்னிப்பா கவனிக்குதுங்க தலைவரே.. அப்பல்லோவில் ஜெ.வை அக்கறையா கவனிச்சிக்கிற சசிகலா, ஒரு நைட் போயஸ்கார்டனுக்கு வந்து நீண்ட நேரம் இருந்த தாகவும் மத்திய உளவுத்துறை சொல்லுது.''’’ ""அ.தி.மு.க. மந்திரிகளும், எம்.எல்.ஏ.க்களும் எங்கெங்கே மூவ் பண்ணுறாங்கன்னும் கவனிச்சிருக்குமே?''’ ""அவங்களை கவனிக்கிறது மாநில உளவுத் துறைதான். எந்த மந்திரிக்காவது அவங்க உறவினர்கள் யாராவது போன்போட்டு, நல்லா இருக்கீங்களான்னு விசாரிச்சா கூட, என் சௌகரியம் இருக்கட்டும். என்ன விசயம்ன்னு சொல்லுங்கன்னு கறாரா பதில் சொல்றாங்க. நல்லா இருக்கேன்னு சொல்றதுக்கும் வாய்விட்டு சிரிக்கிறதுக்கும் அவங்க பயப்படறாங்க. கொங்குமண்டல மந்திரி ஒருத்தர், ரிலாக்ஸ் நேரத்தில், தன் நண்பர்கிட்ட மனம்விட்டுப் பேசியிருக்காரு.

"என்னவாம்?'' ""அந்தம்மா அட்மிட் ஆனதில் இருந்தே, கோட்டைப் பக்கம் போறதே குறைஞ்சிடிச்சி. கோயில் கோயிலா சுத்திக்கிட்டிருக்கோம். திடீர் திடீர்னு மேலிடத்திலிருந்து உத்தரவு வருது. அதன்படி பால்குடத்துக்கு 2000 பேரை ஏற்பாடு பண்ணுறோம். விளக்கு பூஜைக்கு ஆள் தேடுறோம். குடும்பத்தில் இருக்கிற வங்கக்கிட்ட கூட சிரிச்சிப் பேச முடியலை. வீடு வரைக்கும் உளவுத் துறை ஆளுங்களா இருக்காங்க. எங்க முகபாவம் எப்படி? பாடி லாங்வேஜ் எப்படின்னு பார்த்துப்பார்த்து ரிப்போர்ட் அனுப்புறாங்க. வீட்டுல வழக்கமா சோறு தின்னால்கூட விருந்து சாப்பிடறோம்ன்னு தகவல் போயிரும்.
முக்குலத்து எம்.எல். ஏ.க்கள் சின்னம்மா கட்டுப் பாட்டில் இருப்பதால், கொங்குமண்டலம் எப் படின்னு அவங்களுக்கு டவுட் இருக்கு. எங்களை நிழல்மாதிரி கண்காணிக் கிற, ’ஷேடோ வாட்ச்’ ஆட்களைப் போட்டிருக் காங்க. எடப்பாடி பழனிச் சாமி எங்களுக்கான ஆளா இருந்து சமாளிச்சிக்கிட்டி ருக்காரு. எங்களைப் போலவே வன்னியர், நாடார் சமூக எம்.எல். ஏ.க்களும் கண்காணிக்கப்படுறாங்க. அதனால் நாங்க எப்பவும் முகத்தை இறுக்கமா தூக்கி வச்சிக்கிட்டே இருக்கவேண்டியிருக்குன்னு ரொம்பவே மனசொடிஞ்சி பேசியிருக்காரு.
""காவிரிப் போராட்டத்தில் எல்லாக் கட்சிகளும் தீவிரமா களமிறங்கியதில் அ.தி.மு.க தரப்பு அப்செட்டாமே..'' ""காவிரித்தாய்னு ஜெ.வை புகழ்ந்து, அந்த விவகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வச்சிருந்தவங்களாச்சே.. இப்ப அது தமிழகத்தின் பொதுப் பிரச்சினையா ஆனதில் அப்செட்தான். அதிலும் தங்களோட கட்சி ஒதுங்கி நிற்க, தி.மு.க தொடர்ந்து விவசாயிகள் பக்கம் நிற்பதை அ.தி.மு.க விரும்பலை. அதனால சின்னச் சின்ன விஷயங்களைக்கூட தோண்டுறாங்க.''

 ""அதைப் பற்றி நான் சொல்றேன்.. போன முறை நடந்த போராட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டப்ப அவர்கூட நிறைய தொண்டர்கள் கைதாகி சாதாரண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டாங்க. நெருக்கடி, மூச்சு விட சிரமம்னு பலரும் சிரமப்பட்டாங்க. இந்த முறை ஸ்டாலின் கைதானப்பவும் நிறைய பேர் கைதானாங்க. இப்ப அடைக்கப்பட்டது ஏ.சி. வசதியுள்ள மண்டபம். நம்ம ஆட்சி யில் தி.மு.க.வுக்கு ஏ.சி மண்டபமான்னு அ.தி.மு.க தரப்பில் அதிர்ச்சி. தி.மு.க மா.செ. ஒருத்தரே 7 லட்ச ரூபாய் கட்டி மண்டபத்தை புக் பண்ணிட்டாருன்னு தகவல். மதிய சாப்பாடும் மணக்க மணக்க அவர் செலவிலேயே பரிமாறப்பட்டதாம். எப்படி இதையெல்லாம் அனுமதிக்கலாம்னு போலீஸ் மேலே கோபத்தைக் காட்டியிருக்குது அ.தி.மு.க தரப்பு.
நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: