சிவகாசி: அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு விதிமுறைகளை
பின்பற்றாமல் பட்டாசு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதே சிவகாசி தொடர் பட்டாசு விபத்துகளுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகாசியில் பட்டாசு விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. பட்டாசு தொழிற்சாலை, கிடங்குகள் மற்றும் விற்பனை கடைகளை அனுமதிக்கும் போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். ஆனால் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் வாங்கி கொண்டு அலட்சியமாக செயல்படுவதே விபத்துகளுக்கு காரணம் என சமூக ஆர்லவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
;இதனிடையே நேற்று விபத்து நடந்த இடத்தை மதுரை சரக டி.ஐ.ஜி ஆனந்தகுமார் சேமனி மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி ஆனந்தகுமார், விபத்து தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையும், கைது செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பட்டாசு விபத்துகள் அடிக்கடி நிகழ்வதால் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டு அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. தீக்காயத்திற்கு சிகிச்சை அளிப்பதில் தேர்ந்தவர்கள் அங்கு பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளன தினகரன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக