சினிமா டைரக்டர் வி.சேகர், சிலை கடத்தல் வழக்கில் சிக்கி சிறை
சென்றிருப்பது தமிழ் திரை உலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது படத்தில் வரும் கதையின் நாயகர்கள் குறுக்கு வழியில் செல்ல ஆசைப்பட
மாட்டார்கள். உழைத்து... போராடி முன்னுக்கு வருவார்கள். எந்தவித ஆபாச
காட்சிகளும் இன்றி குடும்ப உறவுகளையும், உணர்வுகளையும் அற்புதமாக படம்
பிடிப்பதில் கைதேர்ந்தவர் வி.சேகர்.
இப்படிப்பட்ட ஒரு டைரக்டர் ரூ.80 கோடி மதிப்பிலான சிலை கடத்தல்
விவகாரத்தில் சிக்கியிருப்பது, அவரது படத்தை ரசித்து பார்த்த பெண்கள்
மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘குடும்ப இயக்குனர்’
என்று பெயரெடுத்த வி.சேகர், கடத்தல் கும்பலிடம் சிக்கியது எப்படி? என்பது
பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சினிமாவில் வரும் கடத்தல் காட்சிகளை மிஞ்சும் வகையில் சிலை கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி இருப்பது போலீஸ் வட்டாரத்தையே கலங்கடித்துள்ளது.
திகில் கிளப்பும் இந்த கடத்தல் சம்பவங்களின் பின்னணியை பார்ப்போம்.
கடந்த மே மாதம் பாண்டி பஜார் பகுதியில் வைத்து சில கடத்தல் கும்பலை சேர்ந்த தனலிங்கம், கருணாகரன் ஆகிய 2 பேர் போலீசில் சிக்கினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரிய அளவில் ‘நெட் வொர்க்’ அமைத்து சிலை கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவது தெரிய வந்தது.
இக்கும்பலை கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். அப்போது தான், கைதான கருணாகரனின் சகோதரி மாலதி மூலமாக கடத்தல் கும்பலை கண்டு பிடிக்க போலீசுக்கு ‘புது வழி’ கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது வக்கீல் ஒருவர் மூலமாக போலீசில் மாலதி ரகசிய வாக்கு மூலம் அளித்தார். அதில் தனலிங்கம், கருணாகரன் ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு ரூ.80 கோடி மதிப்பிலான 8 சிலைகளும், கொள்ளையடிக்கப்பட்ட விதம் குறித்தும், அது யார் யாருடைய வீட்டில் எல்லாம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது பற்றியும் புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடுகளின் பட்டியலில் டைரக்டர் வி.சேகரின் வீடும் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து அது தொடர்பான ஆதாரங்களை சேகரித்த பின்னரே போலீசார் வி.சேகரை கைது செய்துள்ளனர். இந்த கடத்தலின் பின்னணியில் 11 பேர் கொண்ட மாபியா கும்பலே செயல்பட்டுள்ளது. கோவில்களில் கொள்ளையடிக்க திட்டம் போட்டு கொடுப்பதில் செங்குன்றத்தை சேர்ந்த ஜெயகுமார் என்பவர் மூளையாக செயல் பட்டுள்ளார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக