சனி, 15 ஆகஸ்ட், 2015

ஈவ்-டீசிங்'கில் இருந்து சிறுமியை காப்பாற்றிய ராணுவ வீரர் அடித்துக் கொலை


உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஈவ் டீசிங்கில் இருந்து சிறுமியை காப்பாற்றிய ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார். மீரட் மாவட்டம் ஹார்தேவ் நகரில் கடந்த வியாழன்கிழமை மாலை, சிறுமியை வாலிபர்கள் ஈவ்டீசிங் செய்து உள்ளனர். அப்போது ஈவ்டீசிங் செய்த வாலிபர்களிடம் இருந்து வாத்மித்ரா சவுதாரி என்ற ராணுவ வீரர் மீட்டுஉள்ளார். பின்னர் வாலிபர்கள்  தங்களுடைய நண்பர்களுடன் வந்து ராணுவ வீரரிடம் சண்டையிட்டு உள்ளனர். கும்பலாக வந்த வாலிபர்கள் ராணுவ வீரரை கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு பலமாக தாக்கிஉள்ளனர். இதனால் காயம் அடைந்த ராணுவ வீரர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுதந்திர தினம்...ராணுவ வீரர் அடித்த கொலை? வெளங்கிடும்,  
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாட்டின் 69 வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை ஈவ் டீசிங்கில் இருந்து காப்பாற்றிய ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுதொடர்பாக அப்பகுதியில் கடை நடத்தும் கிரிஷ்ணாபால் என்பவர் பேசுகையில், என்னுடைய மகள் கடைக்கு வந்து டீ கொடுக்க வந்தார். அப்போது அவரை சில வாலிபர்கள் ஈவ் டீசிங் செய்து உள்ளனர். அவருடையை அழுகை சத்தம் கேட்டதும் என்னுடைய மகன் சச்சின் மற்றும் கடையில் இருந்த வாத்மித்ரா அங்கு சென்றனர். சிறுமிக்கு உதவி செய்தனர். ராணுவ வீரர் வாத்மித்ரா விரட்டிஉள்ளார். பின்னர் அவர்கள் நண்பர்களுடன் வந்து என்னுடைய மகன் சச்சின் மற்றும் வாத்மித்ராவை அடித்துவிட்டனர் என்று கூறிஉள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராணுவம் போலீசிடம் கேட்டுக் கொண்டு உள்ளது dailythanthi.com

கருத்துகள் இல்லை: