திங்கள், 10 ஆகஸ்ட், 2015

எம்.எஸ்.வியின் 20 பாடல்களை இளையராஜா குழுவினர் பாடும் நிகழ்ச்சி! என்னுள்ளே எம் எஸ் வி !

எம்.எஸ்.வி அவர்கள் இசையமைத்த பாடல்களைக் கேட்பதே அலாதியான இன்பம் தான். அதிலும் அவரது பாடல்களை இளையராஜாவின் ஆர்மோனியப் பெட்டியிலிருந்து புறப்படும் இசையிலும், அவரது குரலிலும் கேட்பதென்பது எவ்வளவு இன்பம். இப்படி ஒரு விழாவைத்தான் ‘என்னுள்ளே எம்எஸ்வி’ என்ற தலைப்பில் இசை அஞ்சலி நிகழ்ச்சியாக நடத்தவிருக்கிறார் இளையராஜா. வரும் ஜூலை 27 திங்கட்கிழமை காமராஜர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.மறைந்த எம்எஸ் விஸ்வநாதன் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர்
இளையராஜா. எம்எஸ்வி என் ரத்தத்தில் இசையாக இருக்கிறார் என இரங்கல் அறிக்கை வெளியிட்ட அவர், அதையே தலைப்பாக்கி இப்போது இசையஞ்சலி செலுத்துகிறார்.எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான பாடல்களை, அவர் பாடிய பாடல்களை இளையராஜா தன் குழுவினருடன் மேடையில் இசை சேர்த்து பாடப் போகிறார். உடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் அனைவரும் பங்கேற்கவிருக்கின்றனர்.


எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான 20 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை இசைப்பதற்கான ஒத்திகை இப்போது பிரசாத் லேபில் நடந்து வருகிறது. வேறு ஒரு இசையமைப்பாளரின் பாடல்களை இளையராஜா வாசிப்பதும் பாடுவதும் இதுவே முதல் முறை என்பதால், ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜூலை 27-ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த இசையஞ்சலி நிகழ்ச்சி தொடங்குகிறது   nakkheeran .in 

கருத்துகள் இல்லை: