சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தியாகராயநகர் திலக் தெருவில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீடு உள்ளது. இவர் வீட்டில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பாடிநாகவேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்ற கோதண்டன் மகள் மாலினி (19) வேலை செய்து வந்தார். இவர் தந்தை கண்ணன் இறந்துவிட்டார். தாய் பட்டு இருக்கிறார்.
மாலினி பாமக பிரமுகர் பாண்டியன் என்பவர் மூலம் அன்புமணி ராமதாஸ் வீட்டில் 11 மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்தார். இவருக்கு அன்புமணி வீட்டின் முதல் தளத்தில் தங்குவதற்கு அறை ஒதுக்கப்பட்டிருந்ததாம். இந்நிலையில் மாலினி கடந்த வியாழக்கிழமை தனது ஊரில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்பதற்காக அன்புமணி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
அங்கிருந்து மாலினி ஞாயிற்றுக்கிழமை காலை அன்புமணி வீட்டுக்கு திரும்பி வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலினி வழக்கமான பணியில் ஈடுபட்டாராம். இந்நிலையில் திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு பின்னரும் மாலினி பணிக்கு வரவில்லையாம். இதையடுத்து மாலினி அறையை பார்க்க அங்கு பணிபுரியும் அரக்கோணம் வடக்கண்டிகை சின்ன சைனாபுரத்தைச் சேர்ந்த அன்புமணி (21) பார்க்கச் சென்றார். அவர் ஜன்னல் வழியாக மாலினி, தங்கியிருந்த அறையை எட்டிப் பார்த்தபோது, மாலினி அங்குள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் dinamani.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக