திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் இருந்து செம்மரங்கள் கடத்தப் படுவதில்,
ஆந்திரா, தமிழகத்தை சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள்
என தெரியவந்துள்ளது. என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் கிடைத்த செல் போன்களில்
உள்ள எண்களின் மூலம் போலீஸார் தீவிர விசா ரணை மேற்கொண்டதில் இந்த தகவல்கள்
வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக 16 பேரை போலீஸார் கைது செய்து ரகசிய இடங்களில் வைத்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, மேற்கு வங்கத்தில்
ரூ. 22 கோடி மதிப்புள்ள 11 டன் உயர் ரக செம் மரங்களை ஆந்திர போலீஸார்
பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7-ம் தேதி திருவண்ணாமலை, தர்மபுரி,
சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்கள், ஆந்திர சிறப்பு அதிரடி
படை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம்
குறித்து மத்திய மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகிறது.அவிங்களை எல்லாம் என்கவுண்டர் செய்ய மாட்டங்களாம்! கொஞ்ச நாள் வழக்கு டிராமா நடத்தி பேரம் பேசி அப்புறம் ஊத்தி மூடுவாய்ங்க
ஏற்கெனவே இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிவகுமார் என்பவரின் மனைவி
முனியம்மாள் தொடுத்த வழக்கில், 6 பேருக்கு மறு பிரேத பரிசோதனை
நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த என்கவுன்ட்டரை கொலை வழக்காக பதிவு
செய்யும்படியும், இதில் தொடர்புள்ள போலீஸார் மீது கொலை வழக்குகள் பதிவு
செய்யும்படியும் ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத 24 போலீஸார் மீது கொலை,
ஆள் கடத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஆந்திர அரசு சார்பில் தனிக்குழு அமைக் கப்பட்டு இந்த வழக்கு
குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், என்கவுன்ட்டர் நடந்த இடத்தில்
கிடைத்ததாக கூறப்படும் செல்போன்களில் உள்ள எண்கள் குறித்து தீவிர விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள்
ஆகியோரின் எண்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
16 பேர் கைது
இந்த செல்போன் எண்களின் மூலமாக இதுவரை செம்மர கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு
வரும் 16 முக்கிய புள்ளிகளை ஆந்திர அதிரடி போலீஸார் கைது செய்து ரகசிய
இடங்களில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் தெரிவித்த தகவலின் படி, நேற்றுமுன் தினம் மேற்கு வங்க மாநிலத்தில்
ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 11 டன் உயர் ரக செம்மரங்களை ஆந்திர
போலீஸார் பறிமுதல் செய்துள் ளனர்.
இவற்றின் மதிப்பு ரூ. 22 கோடி என தெரிய வந்துள்ளது. இந்த செம்மரங்கள் கடல்
வழியாக சீனாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக தமிழக
முன்னாள் அமைச்சரின் உதவியாளர் சவுந்தர்ராஜன் என்பவரையும் போலீஸார் கைது
செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கைது?
செம்மரக் கடத்தலில் தமிழகத்தை சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சருக்கு செம்மரக்
கடத்தலில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் தமிழக முன்னாள் அமைச்சர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும்,
மிக விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் போலீஸ் தரப்பில்
தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆந்திர முன்னாள் அமைச்சர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்
என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும் போலீஸ் உயர்
அதிகாரி ஒருவர் தெரிவித்தார். //tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக