His death was not natural It was pre planed hi tech murder.I have some evidence to prove it. Hence I sought CBI probe, he said.killers of saibaba has the backing of some mysterious forces.Properties worth of thousands of Crores have changed hands . Ganapathi Raju said he was attacked twice by unidentified persons for demanding CBI probe in to Baba's death ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 24–ந்தேதி மரணம் அடைந்தார்.
அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர் கணபதி ராஜு மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதுபற்றி அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதனை ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்த கணபதிராஜு மேலும் கூறியதாவது:–
சத்ய சாய்பாபா மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது. அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆதாரங்களுடன் கடந்த ஆட்சியின் போது அப்போதைய முதல்–மந்திரியிடம் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாபா மரணத்தில் பல சதி திட்டங்கள் நடந்து உள்ளது. பாபா இறந்து 25 நாட்கள் கழித்துதான் அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் அவரது ஆயிரம் கோடி சொத்துக்கள் கடத்தப்பட்டு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சத்ய சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும். எனவே இதுகுறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். அதில் எனது ஆதாரங்களையும் இணைந்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக