லிபியா: எத்தியோப்பிய நாட்டு கிறிஸ்தவர்கள் 30 பேரை தலை துண்டித்துக்
கொன்றுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத வெறியர்கள். இதுதொடர்பான வீடியோவையும்
அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
லிபியாவில் வைத்து இந்த கொடூரச் செயலை அவர்கள் நடத்தியுள்ளனர். 29 நிமிடம்
ஓடும் அந்த வீடியோ காட்சியில், 2 குழுக்களாக எத்தியோப்பியர்களைக்
கொல்கிறார்கள் தீவிரவாதிகள். 2 இடங்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
கிழக்கு லிபியாவில் உள்ள பர்கா மாகாணத்தில் ஒரு குழுவையும், தெற்கு
லிபியாவில் உள்ள பஸ்ஸான் மாகாணத்தில் இன்னொரு குழுவையும் தலை துண்டித்துக்
கொன்றுள்ளனர் தீவிரவாதிகள்.
இந்த வீடியோவில் கையில் துப்பாக்கியுடன் காணப்படும் முகமூடி அணிந்த
தீவிரவாதி ஒருவன் கூறுகையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் முஸ்லீமாக மாற
வேண்டும். இல்லாவிட்டால் குரானில் கூறியுள்ளபடி சிறப்பு வரியைக் கட்ட
வேண்டும் என்று மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளான்.
தெற்கு லிபியாவில் உள்ள எத்தியோப்பியர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்
தீவிரவாதிகள். கிழக்கு லிபியாவில் கொல்லப்பட்ட அனைவரையும் ஒரு கடற்கரையில்
வைத்து தலையைத் துண்டித்துக் கொன்றுள்ளனர்.
ஈராக், சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், 2011ம் ஆண்டு
முதல் லிபியாவிலும் புகுந்து விட்டனர். கடாபி பிடிபட்டு கொல்லப்பட்ட
பின்னர் லிபியா தற்போது ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது. இதனால் லிபியாவிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள்
ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புக படகுகளில் ஏறித் தப்பி வருகின்றனர்.
அப்படித் தப்பி வருவோரில் பலர் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி
உயிரிழப்பதும் தொடர் கதையாகியுள்ளது.
Read more at: tamil.oneindia.com
Read more at: tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக