தஞ்சாவூர்: தே
முதிக தலைவர் விஜயகாந்துதான் சினிமாவில் புள்ளிவிபர
புலியாக பட்டியல் வாசிப்பார். ஆனால் பாமக இளைஞரணித் தலைவரும் தர்மபுரி
எம்.பியுமான அன்புமணி ராமதாஸோ இப்போது ஆளும் அதிமுக அரசு மீது
குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்க வந்த கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கொலைகள், 85
ஆயிரம் கொள்ளைகள், 5 ஆயிரம் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக
குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை மருத்துவக்குடியில் படத்
திறப்பு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் புகார் பட்டியல் வாசித்த
கையோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டதாக கூறி பீகாருடன்
ஒப்பிட்டு பேசினார்.
4 ஆண்டுகள்… 8,000 கொலைகள், 85,000 கொள்ளைகள், 5,000 பலாத்காரம்…: அன்புமணி புள்ளிவிபரம் ஒற்றுமையின்மை தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை. இதனால் காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு உரிமைகளை இழந்து வருகிறோம். மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் வீணாகிவிடும். ஏறத்தாழ 5 கோடி பேர் குடிநீருக்கு அவதியுறும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்தித்து முறை யிட தமிழக அரசு முன்வர வேண் டும். அரசுக்கு இழப்பு சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாவார் எனக் கருதி, தமிழகம் முழுவதும் 400 புதிய அரசுப் பேருந்துகளை இயக்காமல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அரசுப் போக்குவரத்துக்கழகத்துக்கு ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. முடங்கிய திட்டங்கள் இதேபோல, சென்னை மெட்ரோ ரயில் பணி முடிந்த நிலையிலும், கடந்த 6 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன? இது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது. நிர்வாக திறமையின்மை இந்தியாவிலேயே நிர்வாகத்தில் மோசமான மாநிலமாக இருந்த பீகாரை தற்போது தமிழகம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்க வந்த கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கொலைகள், 85 ஆயிரம் கொள்ளைகள், 5 ஆயிரம் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார் அன்புமணி ராமதாஸ்.
Read more tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக