சென்னை : 'பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு வழக்குகள்
நிலுவையில் இருக்கையில், ஜெயலலிதா வழக்கில் மட்டும், 24 மணி நேரத்தில்,
உச்ச நீதிமன்றம், பெரிய அமர்வை அமைத்தது எப்படி?' என, தி.மு.க., தலைவர்
கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட
அறிக்கை:ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி
சிங் ஆஜராவது குறித்து, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வேறுபட்ட கருத்து
தெரிவித்ததால் வழக்கு, அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுபோல், பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்ட பல வழக்குகளுக்கு, இதுவரை பெரிய
அமர்வு அமைக்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா வழக்கில், பெரிய அமர்வுக்கு
மாற்றும் உத்தரவு வெளியாகி, 24 மணி நேரத்தில் அந்த அமர்வு அமைக்கப்பட்டு,
விசாரணை தேதியையும் அறிவித்துள்ளனர்.
இதெல்லாம், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தெரிந்து தான் நடக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஜெயலலிதாவோடு தண்டனை பெற்ற மற்ற மூவரின் சார்பில் ஆஜரான, ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரத்துக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல்முறையீட்டு ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியும், கேரள கவர்னருமான சதாசிவத்தின் மீது குற்றச்சாட்டுகள் இருக்கையில், அவரை தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக நியமிப்பது குறித்து, உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக