கைநிறைய
படங்களுடன் நடித்து வருகிறார் நயன்தாரா. மலையாளத்தில் தனது
மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் தரப்படுவதில்லை என்பதால் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் சித்திக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’
படத்தில் சம்பளம் குறைவு என்றாலும் அப்படத்தை வேறு ெமாழிகளில் ரீமேக்
செய்யும்போது தன்னையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற
நிபந்தனையுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். படம் வெளியாகி ஹிட்டானது.தற்போது
இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் சித்திக். இதன்
மூலம் நயன்தாரா இந்திக்குள் நுழைவார் என்ற எதிர்பார்ப்பு
ஏற்பட்டிருக்கிறது. அசின், காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்தியில் நடிக்கச்
சென்றபோதே நயன்தாராவுக்கும் இந்தியில் நடிக்க அழைப்பு வந்தது. அதை அவர்
ஏற்காமல் மவுனம் காத்து வந்தார்.
பிரபுதேவாவை காதலித்தபோது அந்த வாய்ப்புகள் வந்ததால், பாலிவுட்டில் நடிக்க வேண்டாம் என்ற பிரபுதேவாவின் கண்டிஷனால் அவர் நடிக்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் இப்போது நயன்தாரா பிரபுதேவாவை வெறுப்பேற்ற முடிவு செய்துள்ளாராம். மாஜி காதலன் வலம் வரும் பாலிவுட்டில் தானும் ஒரு கலக்கு கலக்கி சவால்விட எண்ணி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - See more at: /tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக