ஞாயிறு, 28 டிசம்பர், 2014

நிலம் கையகப்படுத்த வசதியாக அவசர சட்டம் ! இன்சுரன்ஸ், சுரங்கத்தொழில், நிலம் ! அந்நியரே Take India ! மோடியின் புதிய கோஷம்?

புதுடில்லி : காப்பீடு, நிலக்கரி ஆகிய துறைகளை தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த, நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்திற்கும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபாவில் நிறைவேறிய காப்பீட்டு மசோதாவை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய முடியாத வகையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை, 26 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்துவது; நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது ஆகியவை தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களை அமல்படுத்த, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அவை நடைமுறைக்கு வந்துள்ளன.இதையடுத்து, நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவையும், அவசர சட்டம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  மக்களின் சொத்து கார்பொரேட்கையில..நிலம் அபகரிப்பை எளிதாக்கும் வழி..அப்புடியே அந்நியரும் இந்தியாவை பகுதி பகுதியா வாங்க அனுமதிப்பாங்க போல.."டேக் இந்தியா" இதுதான் மோடி அரசின் அடுத்த கோஷம்..


இது தொடர்பாக, சட்ட அமைச்சகத்திடம் அவசர சட்ட வரைவு அறிக்கையை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு, ஊரக மேம்பாட்டு அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த, இப்போதுள்ள சட்டங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதால், அவசர சட்டம் மூலம், நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 6 வார 'கெடு':
*அவசர சட்டம் பிறப்பித்த பிறகு, பார்லி., கூட்டம் துவங்கும் நாளில் இருந்து ஆறு வாரங்களுக்குள், அச்சட்டத்திற்கு பார்லி.,
உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும்.
*ராஜ்யசபாவில், பா.ஜ.,விற்கு பெரும்பான்மை இல்லாததால், பார்லி., கூட்டு கூட்டத்தில், அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: