Modi's wife Jashodaben denied information under RTI பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென். இவர் மோடியுடன் திருமணமான
சில நாட்களில் பிரிந்து விட்டார். குஜராத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார்.
மோடியுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
இதற்கிடையே மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு அவருக்கு மனைவி இருப்பது பற்றிய தகவல் நாடு முழுவதும் தெரிய வந்தது. மோடி பிரதமரானதால் ஜசோதா பென்னுக்கு பிரதமர் மனைவி என்ற அடிப்படையில் குஜராத் போலீசார் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஜசோதா பென் தனக்கு எந்த அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தனக்கு எந்தெந்த சலுகைகள் உள்ளன என்பன உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குஜராத் போலீசுக்கு மனு அனுப்பி இருந்தார்.
யார் பாதுகாப்புக்கு வருகிறார்கள்? யார் போகிறார்கள் என்பது தெரியாததால் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்காரர்கள் விவரம் என்ன என்றும் கேட்டு இருந்தார்.
பாதுகாப்பு குறித்து அவருக்கு பதில் அளிக்க குஜராத் போலீசார் மறுத்து விட்டனர். இது பற்றி மேசானா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோதாலியா, ஜசோதா பென்னுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
உள்ளூர் உளவுத் தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்த உள்ளூர் உளவுத் தகவல்களை வெளியிட விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் ஜசோதா பென் கோரிய தகவல்களை அளிக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக