இங்கிலாந்து ராணியை வரவழைத்து 1997ம் ஆண்டு ‘மருதநாயகம்' படத்தை
தொடங்கினார் கமல். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பைனான்ஸ்
பற்றாக்குறையால் நின்றுபோனது. இந்நிலையில் அப்படத்தை மீண்டும்
தொடர்வதுகுறித்து ஆலோசனை நடத்தி வந்தார் கமல். பெரிய பட்ஜெட் படம் என்பதால்
இதுவரை அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இந்நிலையில், ‘மருதநாயகம்
படம் கைவிடப்பட்டுவிட்டதா?' என்று கேட்டபோது கமல் பதில் அளித்தார். அவர்
கூறும்போது,‘இது நிறைவேறும் காலம் நெருங்கி வந்திருக்கிறது. லண்டனை சேர்ந்த
எனது நண்பரும், பெரிய தொழில் அதிபருமான ஒருவர் இப்படத்தை தயாரிக்க தயார்
என்று என்னிடம் கூறி இருக்கிறார். இதற்கான பட்ஜெட் பெரிய அளவில் செலவாகும்
என்றேன். அதுபற்றி கவலை இல்லை. எவ்வளவு செலவானாலும் அதை என்னால் தாங்க
முடியும் என்று கூறி உள்ளார்' என்றார்.இதையடுத்து 2015ம் ஆண்டு மருதநாயகம்
படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை கவனிக்கிறார் கமல்..tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக