செவ்வாய், 30 டிசம்பர், 2014

நிர்மலா புலம்பல்: குவிந்தது அன்னிய நேரடி முதலீடு: 7 மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி!

புதுடில்லி: நடப்பு 2014 - 15ம் நிதியாண்டில், ஏப்., - அக்., வரையிலான ஏழு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.டில்லியில், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற பயிலரங்கை, அவர் துவக்கி வைத்து மேலும் பேசியதாவது: தயாரிப்புத் துறையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை. நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், 'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில், 'சிவப்பு நாடா' முறையை ஒழித்து, தற்போதைய முரண்பாடான விதிகளில் சீர்திருத்தம் செய்து, தகவல் தொழில்நுட்ப வசதியை பரவலாக்க, அரசு முனைந்துள்ளது. இதன் மூலம் நிர்வாக நடைமுறை, ஆக்கப்பூர்வமாகவும், சுலபமானதாகவும் ஆகியுள்ளது. 
இந்தம்மா சும்மா சாமியாடாம இருக்கமாட்டாய்ங்க ? 83 லட்சம் முதலீடு உள்ள நாட்டில் ஒரு லட்சம் வருவது போவது ஒன்றும் பெரிய செய்தி இல்லை. நோக்கியா  foxon தமிழகத்தில் மூடுகிறார்கள். ஏனெனில் அவர்களின் சலுகை காலம முடிந்து விட்டது. அது போல எவ்வளவு முதலிடு திருப்பி சென்றுள்ளது. ? கூடவே வெளி நாட்டு பொருட்களும் இறக்குமதியாகும்.... உள்ளூர் தொழில் நலிவடையும்.....


வலிமையான தயாரிப்புத் துறையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவும், ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, அவர்களின் எண்ணங்களை ஈடேறச் செய்ய முடியும். மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகள் மூலம், நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்தி, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், ஏப்., - அக்., வரையிலான ஏழு மாதங்களில், அன்னிய நேரடி முதலீடு, 25 சதவீதம் அதிகரித்து, 1.04 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 82,920 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு, அமைச்சர் கூறினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: