செவ்வாய், 30 டிசம்பர், 2014

படப்பிடிப்பின் நடுவில் தம்பியை எண்ணி அழுத கேத்ரின் தெரசா

மெட்ராஸ்‘ படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. இவரது தம்பி சமீபத்தில் பெங்களூருவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். சமீபகாலமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ள வரும் கேத்ரின் தம்பியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவ்வப்போது கதறி அழுகிறாராம். இது பற்றி அவர் கூறியது: என்னுடைய தம்பி கிறிஸ்டோபரை நான் இழந்துவிட்டேன். இந்த இழப்பை வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாது. நானோ என் குடும்பத்தினரோ கிறிஸ்டோபரின் இந்த பரிதாப முடிவுக்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. இது தாங்கமுடியாத வேதனையை தந்துள்ளது. அவன்தான் எங்கள் வீட்டில் கடைக்குட்டி. எங்களுக்கு ரொம்பவும் முக்கியமானவன். கடந்த 2 வருடமாக எனது பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கவில்லை. இதனால் அவனது படிப்பில்  ஆர்வம் குறைந்தது.



 டீன் ஏஜ் வயதில் இப்படித்தான் இருப்பார்கள் என்று அதிகம் கண்டிக்காமல் மற்றவர்கள் அவனை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தோம். ஆன்மிக பயணத்துக்கும் அவன் சென்றிருந்தான். அதன் மூலம் அவன் தன்னை உணர்ந்துகொள்வான் என்று எண்ணினோம். மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்து  சந்தோஷமாக இருப்பான் என்று எண்ணினோம். ஆனால் அவன் கடவுளிடமே போய்சேர்ந்துவிட்டான். சுத்தமான அவனது ஆத்மாவால் சொர்க்கமே அவனால் சந்தோஷப்படும் என்று நம்புகிறேன். நான் எவ்வளவு அப்செட்டாக இருந்தாலும நகைச்சுவை உணர்வு மிக்க கிறிஸ்டோ என்னை சிரிக்க வைப்பான். இரண்டு வாரத்துக்கு ஒருமுறையாவது அவன் என்னை சந்தித்து பேசுவான். அவன் இப்போது இல்லை என்று எண்ணும்போது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. இவ்வாறு கேத்ரின் கூறினார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: