புதன், 31 டிசம்பர், 2014

PK திரைப்பட தியேட்டர்கள் மீது இந்து பயங்கரவாத பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பி.கே.இப்படம்  வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்து தமிழில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி பஜ்ரங் தள் அமைப்பினர், இப்ப்டம் வெளியிடப்பட்ட  தியேட்டர்களை அடித்து நொறுக்கினர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிட்டி கோல்டு மற்றும் சிவ் தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டது. அங்கு சுமார் 20 பேர் கொண்ட குழுவுடன் வந்த பஜ்ரங் தள் அமைப்பினர், தியேட்டர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தியேட்டரின் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர்.இந்த சம்பவத்தையடுத்து நவராங்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அமைப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.


”இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த இரண்டு தியேட்டர்களிலும் டிக்கெட் கவுண்டர்களை அவர்கள் தாக்கியதாக நாங்கள் அறிந்தோம். அந்த மர்ம நபர்களை கண்டறிய நாங்கள் அங்குள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம் ”என்று போலீஸ் துணை கமிஷனர் விரேந்திரசின் யாதவ் தெரிவித்தார்.

இருந்த போதிலும் இந்த தாக்குதல் நடத்தியதை பஜ்ரங்க் அமைப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும்,இந்த திரப்படைத்தை திரையிடுவதை தியேட்டர்கள் நிறுத்த வேண்டும் எனவும் நிறுத்தாவிட்டால் நாங்கள் தாக்குதலை தீவிரப்படுத்துவோம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இப்படத்தின் முதல்போஸ்டர் வெளியிடப்பட்டபோதே, பெரும் சர்ச்சை உருவானது. அந்தப்படத்தின் போஸ்டரில் அமீர்கான் நிர்வாணமாக நிற்பது போன்ற ஒரு காட்சி வெளியானது.  இந்த சர்ச்சையை கடந்து டிசம்பர் 19 இப்படம்  வெளியானது குறிப்பிடத்தக்கது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: