சென்னை: மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியான சம்பவம்
தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்
என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அரசு வக்கீலை பார்த்து
சரமாரி கேள்வி எழுப்பினார். சென்னை உயர்நீதிமன்றத்தில், தி.மு.க.
பொருளாளரும், எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில்
கூறியிருப்பதாவது:
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், ஜூன் 28ந் தேதி 11 அடுக்கு மாடி கட்டிடம் சீட்டு கட்டுப்போல இடிந்து சரிந்து விழுந்ததில் பலர் பலியாகியுள்ளனர். சரிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் என்று 3 ஆயிரத்து 750 பேர் 8 நாட்கள் போராடி அகற்றியுள்ளனர். என்னதான் சாட்டை பம்பரம்னு சுழற்றினாலும் கடைசில ஊத்திதான் மூடப்போறீகளா?
அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த இடிபாடுகளில் 61 பேர் இறந்ததா கவும், 27 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சாவு எண்ணிக்கை 100 வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கட்டிடம் பல விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
கட்டிடம் கட்டப்பட்ட பகுதி, நீர் பிடிப்பு பகுதியாகும். இந்த நிலம் மிகவும் பலவீனமானதாகும். இங்கு 6 அடுக்குகளை கொண்ட 2 அடுக்கு மாடி குடியிருப்புக்களை கட்ட அனுமதி பெற்றுவிட்டு, அதில் 11 அடுக்கு கொண்ட 2 குடியிருப்புக்களை பிரைம் சிருஷ்டி கட்டுமான நிறுவன உரிமையாளர் மனோகரன் கட்டியுள்ளார்.
இந்த கட்டிடத்துக்கு அனுமதி கேட்டு சி.எம்.டி. ஏ.வில் விண்ணப்பம் செய்வதற்கு முன்பே பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழக அமைச் சர் ஒருவர் பங்கேற்றும் உள்ளார். அதாவது கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் உரிய அதிகாரிகளிடம் சென்றடைவதற்கு முன்பே, இந்த கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு விட்டது. இந்த கட்டிடம் கட்டுவதற்காக விதிமுறைகளை தளர்த்தி, தமிழ்நாடு நகர்புற மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ் 2 அரசாணைகளை, தமிழ்நாடு வீட்டு வசதிகள் மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலாளர் பிறப்பித்துள்ளார். எனவே, இந்த சட்டவிரோத கட்டிடம் கட்டுவதற்கு அரசியல் அமைப்பு சாசனத்தின் அடிப்படையில் பதவி வகிப்பவர்கள், உயர் அதிகாரிகள் உட்பட பலரின் பங்கு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தாலும், அவர்கள் நேர்மையாக, பாரபட்சமின்றி விசாரணை நடத்துவார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை.
ஆகவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், இந்த கட்டிடம் கட்டுவதற்கு விதிமுறைகளை தளர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, கட்டிட விபத்தில் 300 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து அறிவித்துள்ளது. மேலும், பலர் உடல் கட்டிடத்தின் கீழே உள்ளது. அவசர அவசரமாக உடல்களை அப்புறப்படுத்தியுள்ளனர். அவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து செல்கிறார்கள். கட்டிடத்திற்கு அனுமதி பெறுவதற்கு முன்பே பூஜை நடத்திவிட்டு கட்டிட பணியும் தொடங்கிவிட்டனர். அதன்பிறகு மண் பரிசோதனையை அதிகாரிகள் சரியாக நடத்தவில்லை. அனுமதி கொடுத் ததில் முறைகேடு நடந்துள் ளது. இதில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டுள்ளார். இப்படி இருக்கும் போது தமிழக போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், என்றார்.
தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கூடாது, நீதிபதி ரகுபதியை விசாரணை கமிஷன் நீதிபதியாக நியமித்துள்ளோம். வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நீதிபதி ரகுபதி, ஏற்கனவே மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவராக உள்ளார். குண்டர் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார். புதிய தலைமை செயலக கட்டிட விவகாரம் தொடர்பாக விசாரணை கமிஷன் தலைவராக உள்ளார். இத்தனை பொறுப்புகளை வைத்துள்ள இவர் எப்படி கட்டிட விவகாரத்தை விசாரிக்க முடியும்.
அவருக்கு போதிய நேரம் இருக்குமா? இவரை விட்டால் வேறு யாரும் நீதிபதி இல்லையா? ஏன் இவரையே இதற்கும் அரசு நியமித்துள்ளது? மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியுமா? அந்த விவரத்தை அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். வரும் 28ம் தேதி வழக்கு விசாரணையை தள்ளிவைக்கிறேன். அன்றைக்கு மவுலிவாக்கம் கட்டிடத்தில் எத் தனை பேர் பணியாற்றினார்கள். எவ்வளவு பேர் பலியானார்கள், எவ்வளவு பேர் காயம் அடைந்தனர். இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற விவரத்தை அரசு அறிக்கையாக தயார் செய்து வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.இந்த வழக்கை திமுக பொருளாளர் ஸ்டாலின் சார்பாக வக்கீல்கள் பரந்தாமன், நீலகண்டன், பிரசன்னா ஆகியோர் தாக்கல் செய்தனர். dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக