கோவை:கோவையில், காங்., நிர்வாகியிடம் பிடிபட்ட ஒரு கோடி ரூபாய்,
யாருக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த பரபரப்பு
தகவல்கள் வெளியாகியுள்ளன. நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை
கைப்பற்றும் திட்டத்துடன், தொழிற்சங்க நிர்வாகிகளை விலைக்கு வாங்கவே, இந்த
தொகை எடுத்துச் செல்லப்பட்டதாக, தொழிற்சங்க பிரமுகர்
குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை நகரில் மேட்டுப்பாளையம் சாலை, கண்ணப்ப நகர் சோதனைச்சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு வாகன தணிக்கை நடத்திய, சாயிபாபாகாலனி போலீசார், தமிழக காங்., மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் ராதாகிருஷ்ணன் காரில் இருந்த, ஒரு கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆனால், காரில் மூன்று கோடி ரூபாய் இருந்ததாக, வக்கீல் விஜயராகவன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்;
போலீசார் இதை மறுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய், கோவை மாவட்ட கருவூலத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. யாருக்கு போன பணம்?<
இவ்வளவு பெரிய தொகை, முறையான ஆவணங்கள் இல்லாமல், யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. எச்.எம்.எஸ்., தொழிற்சங்கத்தின் ௧௦௦ கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்ற பிரச்னை இருந்து வருகிறது.எச்.எம்.எஸ்., தொழிற்சங்கத்தில், ஏ. சுப்பிரமணியன் மாநில தலைவராகவும், ராஜாமணி செயலாளராகவும் இருந்த நிலையில், இந்த சங்கத்துடன் இணைந்த கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்திலும் இருவரும் மாநில நிர்வாகிகளாக இருந்தனர். இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், ராஜாமணியை தொழிற்சங்கத்திலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். சங்கம் உடையும் நிலையில் உள்ளது. பஞ்சாலை தொழிற்சங்கத்திற்கு ரூ. 100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவற்றை யார் நிர்வகிப்பது என்பதிலும் பிரச்னை உள்ளது.
இதுகுறித்து, ராஜாமணி கூறுகையில், ''பஞ்சாலை தொழிற்சங்கத்தில், ௭௫ பேர் மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள், சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றவர்கள். இதில் ௬௪ பேர் எங்கள் பக்கம் உள்ளனர். இவர்களை தங்கள் பக்கம் இழுக்க, சிலர் திட்டமிட்டு, பேரம் பேசவே கோடிக்கணக்கில் பணத்தை எடுத்துச் சென்று போலீசாரிடம் சிக்கியுள்ளனர்,'' என்றனர். ஒரு கோடி ரூபாய் காரில் கடத்தி செல்லப்படுவதாக போலீசுக்கு முன் கூட்டியே தகவல் அளித்து, அந்த பணம் பிடிபட காரணமாக இருந்த விஜயராகவன், ராஜாமணியின் வக்கீல் என்பது குறிப்பிடத்தக்க dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக