அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் சந்தீப் சிங் (29).
சீக்கியரான இவர் தனது நண்பர் பல்தே சிங்குடன் நியூயார்க்கில் ரோட்டோரம்
நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர்கள் மீது இடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தீப் சிங் லாரி டிரைவரிடம் தட்டி கேட்டார். உடனே அந்த நபர் சீக்கிய இளைஞர்களிடம் இனவெறியுடன் பேசினார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து லாரியை செல்ல விடாமல் சந்தீப் சிங் அதன் முன்னால் நின்று மறியல் செய்தார். போலீசாரை அழைத்தார். ஆனால் மனிதாபிமானம் இல்லாத அந்த டிரைவர் லாரியால் சந்திப் சிங் மீது மோதினார்.
மேலும் லாரி மூலம் அவரை 30 அடி தூரம் ரோட்டில் இழுத்து சென்றார். இதனால் அவர் உடைகள் கிழிந்து உடலில் ரத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு காமிராவில் பதிவு செய்துள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதுmaalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக