பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ.,
கூட்டணி அரசுக்கு, இன்சூரன்ஸ் மசோதா விஷயத்தில், முதல் நெருக்கடி
ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய
அரசு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக,
இன்சூரன்ஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.
விரைவில் மசோதா:இன்சூரன்ஸ் துறையில், தற்போது 26 சதவீதம் வரை மட்டுமே, வெளிநாட்டு முதலீடு களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை, 49 சதவீதமாக உயர்த்தும் மசோதா, பார்லிமென்டில் கொண்டு வரப்படவுள்ளது.ராஜ்யசபாவில், இன்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவை எல்லா கட்சிகளும் எதிர்த்து மண்ணாக்க வேண்டும். அது அவர்கள் இந்தியாவிற்கு செய்த பெரிய உதவியாக இருக்கும். இது நாள் வரை நீங்கள் அடித்த கொள்ளைக்கு இது பரிகாரமாக இருக்கலாம்.
இதில், 80க்கும் அதிகமான திருத்தங்கள் கோரப்படவுள்ளன.'இன்சூரன்ஸ் துறை தனியார் மயமாக்கப் படுவதை ஏற்க முடியாது' என, முக்கிய எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன.'இந்த மசோதாவை, சபையில் கொண்டு வந்தால், அப்படியே பார்லிமென்ட் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, வலியுறுத்தி, ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியிடம், ஒன்பது எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளன. இதனால், இந்த மசோதா நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதைய பா.ஜ., அரசை பொறுத்தவரை, இந்த மசோதா தான், முதல் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை.இதைத் தொடர்ந்து, இன்னும் ஏராளமான சீர்திருத்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த மசோதா நிறைவேறாவிட்டால், மற்ற மசோதாக்களும் பின்னடைவை சந்திக்க நேரிடும்.ராஜ்யசபாவைப் பொறுத்தவரை, பா.ஜ., கூட்டணிக்கு பலம் இல்லை.இதற்காக, எதிர்க்கட்சிகளுடன், ஏற்கனவே பேச்சுவார்த்தையை பா.ஜ., துவக்கிவிட்டது.காங்கிரஸ், திரிணமுல், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தி.மு.க., ஆகிய கட்சிகள் சார்பில், மசோதாவுக்கு எதிராக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. இந்த கட்சிகளின் ஒட்டுமொத்த எம்.பி.,க்கள், 133 பேர்.மொத்தம், 242 உறுப்பினர் அடங்கிய ராஜ்யசபாவில், தேசிய ஜனநாயக கூட்டணி யின் பலம், வெறும் 61 மட்டுமே.காங்., தயவு தேவை
இந்த மசோதா நிறைவேற வேண்டுமெனில், எதிர்க்கட்சியான காங்கிரசின் தயவு தேவை. காங்கிரஸ் உறுதியாக எதிர்த்தால், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், திரிணமுல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவையாவது பெற வேண்டும்.இதில், பிஜு ஜனதா தளம், மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அ.திமு.க., வின் நிலை குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, இன்சூரன்ஸ் மசோதாவை அடிப்படையாக வைத்து, ராஜ்யசபாவில் கட்சிகள் எடுக்கும் நிலைப்பாடுகள், புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழி வகுக்கலாம்.மோடி தலைமையிலான அரசு, பார்லிமென்டில் ஏற்பட்டுள்ள இந்த முதல் நெருக்கடியை எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தான், அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது டில்லி நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக