புதன், 26 மார்ச், 2014

கலைஞர் :நன்றி மறந்தவர்கள், திமுகவை பழிவாங்கவே காங்கிரசார் ஸ்பெக்ட்ரம் வழக்கை தொடர்ந்தனர். அன்று காங்கிரசை கைதூக்கி விட்டது திமுக


சென்னை: தமக்கு கொள்கைதான் முக்கியம்,, நன்றி மறந்தவர் அண்ணன், தம்பி யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டோம்..திமுகவை பழிவாங்கவே ஸ்பெக்ட்ரம் வழக்கை காங்கிரஸ் தொடர்ந்தது என்று திமுக தலைவர்  கலைஞர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தென் சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வடசென்னை திமுக வேட்பாளர் கிரிராஜன் ஆகியோரை ஆதரித்து சிந்ததாரிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  கலைஞர் பேசியதாவது: நான் திமுகழகத்தின் தலைவன்.. தொண்டர்களை சந்திக்க வந்திருக்கிறேன் என்ற நான் இறுமாப்புடன் பேச தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அல்ல. இங்கே இந்துவாக முஸ்லீமாக சீக்கியராக, கிறிஸ்துவராக இருந்தாலும் அனைவரும் தோழர்களே இதற்காக மத ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலை அன்று பாடினர். 1938-ல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன். ஏறத்தாழ 75 ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலேயே உருண்டோடிவிட்டன. ஆனால் அண்ணா பெயரை மட்டும் வைத்துக் கொண்டு ஒப்புக்காக தமிழகத்திலேயே சிலர் கட்சிகள் நடத்துகின்றனர். அப்படி கட்சி நடத்துகிற ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனேயே அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை இடித்து தூளாக்கினார்.
அண்ணன் தம்பியாகவே இருந்தாலும் நன்றி மறந்தால் மன்னிக்க மாட்டேன்:  கலைஞர் கொடியேற்றும் உரிமை முன்பெல்லாம் தேசியக் கொடியை ஏற்றுகிற உரிமை மாநில முதல்வர்களுக்கு இல்லாமல் இருந்தது. நான் முதல்வரான போது பிரதமராக இருந்த இந்திராவிடம் வாதாடி முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தேன். அப்படி நான் உரிமை பெற்றுக் கொடுத்தேன் என்பதற்காக சுதந்திர தினத்தன்று ஜெயலலிதா கொடியேற்றமாட்டாரா? அல்லது திமுக ஆட்சிக் காலத்து பாலம் என்பதால் அதில் போகமாட்டேன் என்று சொல்வாரா ஜெயலலிதா? இதே ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் கார் கருணாநிதி போட்ட சாலையில்தான் செல்கிறது... அதில் செல்ல மாட்டேன் என்பாரா? எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை என் ஆட்சிக் காலத்தில் நான் நீட்டிக்கச் செய்தேனே.. அத்துடன் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவுத் திட்டத்தில் முட்டையையும் சேர்த்து விரிவாக்கம் செய்தோம்...இவர்களைப் போல எதிர்த்து மூர்க்கமாக நடக்கவில்லை. ரூ1 சம்பளம் வாங்கிய ஜெ.வின் சொத்துகள் இவை! தற்போது ஏடுகள் செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றவையாக இருக்கின்றன. ரூ1 சம்பளம் வாங்கியவராக ஊர் ஊராகப் பேசுகிற முதல்வர் ஜெயலலிதா அம்மையார் குவித்திருக்கிற தொகை எவ்வளவு தெரியுமா? அடே அப்பா.. ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வரின் சம்பளமா இது என எண்ணத் தோன்றும்!! பெங்களூரிலே நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங் உண்மைகளைப் போட்டு உடைத்துவிட்டார்.. சென்னை அருகே வாலாஜாபாத்தில் ஜெயலலிதாவுக்கு 600 ஏக்கர் நிலம் சிறுதாவூரில் 25 ஏக்கரில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கொடா நாட்டில் 800 ஏக்கர் நிலம்- பங்களாக்கள் இருக்கின்றனவாம். கொடா நாட்டில் ஒரு ஏக்கர் ரூ5 கோடி எனில் அங்கு மட்டும் ரூ4 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து. அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அண்ணா திமுக தலைவிக்கு 200 ஏக்கர் நிலம் இருக்கிறதாம். கன்னியாகுமரி பகுதியில் 1190 ஏக்கர் நிலம், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் 200 ஏக்கர் நிலம், 30 கார்கள், டிராக்டர்கள், ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம் என பதவியில் இருந்தபோது சொத்துகளை வாங்கிக் குவித்தார் என்கிறார் பவானிசிங். இத்தனை சொத்துகளையும் குவித்துவிட்டு ஊழல் பற்றி எதுவும் தெரியாத பச்சிளம் குழந்தை போல பேசுகிறார் ஜெயலலிதா. ரூ5 ஆயிரம் கோடி சொத்து குவித்த ஜெயலலிதா பற்றி துணிச்சலோடு செய்தி வெளியிட்டால் அந்த ஏட்டை வணங்குகிறேன். திமுகவை பழிவாங்க ஸ்பெக்ட்ரம் வழக்கு திமுகவினரை பழிவாங்கும் வகையில் காங்கிரசார் ஸ்பெக்ட்ரம் வழக்கை தொடர்ந்தனர். தங்களது ஆட்சியைக் காப்பாற்ற நன்றி மறந்து போனதால் காங்கிரஸ் தற்போது தாழ்ந்து போய்கிடக்கிறது. அன்று கைதூக்கிவிட்ட திமுகவை படுத்திய பாட்டை இப்போது காங்கிரஸ் அனுபவிக்கிறது. நாளை மனம் திருந்தி மதச்சார்பற்றநிலைமைக்கு திரும்பினால் காங்கிரஸை ஆதரிப்போம். ஆனால் ஓட்டுப் போட அல்ல. நன்றி மறந்தால் மன்னிப்பு இல்லை... நாளை திருந்தினால் காங்கிரஸுக்கு பொது மன்னிப்பு தருவோம். ஆனால் நன்றி மறந்தவர்கள் அண்ணன் தம்பியாக யாராக இருந்தாலும் மன்னிக்கமாட்டோம். எனக்கு கொள்கைதான் முக்கியமே குழந்தைகள் குட்டிகள் அல்ல. இவ்வாறு  கலைஞர் கருணாநிதி பேசினார்
tamil.oneindia.in     

கருத்துகள் இல்லை: