செவ்வாய், 25 மார்ச், 2014

நம்பலாமா ?விமானம் இவ்வளவு தொலைவு எப்படி வந்தது என்பதை நிரூபிக்க அவர்களிடம் ஒற்றை ஆதாரம்கூட கிடையாது

விமானம் கடலில் வீழ்ந்தது என்று அறிவிக்க மலேசிய அரசுக்கு ‘ஏதோ நிர்ப்பந்தம்’ காரணம்? "

விமானம் எப்படி இங்குவரை வந்தது?

மலேசிய விமானம் இந்தியக் கடலில் வீழ்ந்தது என மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளதை, நாம் விசாரித்தவரை கனேடிய, மற்றும் அமெரிக்க ஏவியேஷன் வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
விமானத்தின் பாகங்களை கடலில் கண்டெடுக்கும்வரை, இப்படியொரு அறிவிப்பை செய்தது, தவறான வழிகாட்டல் என்கிறார்கள் அவர்கள்.
கனேடிய விமானி ஒருவர், “மலேசிய பிரதமரோ, அல்லது அவருக்கு தரவுகளை வழங்கிய பிரிட்டனின் ‘இன்மார்சாட்’ நிறுவனமோ, இந்த விமானம் இவ்வளவு தொலைவு எப்படி வந்தது என்பது குறித்து ஒரு வார்த்தைகூட தெரிவிக்கவில்லை.
ஒரு விஷயத்தை என்னால் (கனேடிய விமானி) அடித்துச் சொல்ல முடியும். விமானம் இவ்வளவு தொலைவு எப்படி வந்தது என்பதை நிரூபிக்க அவர்களிடம் ஒற்றை ஆதாரம்கூட கிடையாது” என்றார்.
இந்த மாய மறைவு குறித்த புலனாய்வில் ஈடுபட்டுள்ள சிலரே, “மலேசிய அரசு, ‘ஏதோ ஒரு நிர்ப்பந்தம்’ காரணமாக தேடுதல் முடிவடையும் முன், விமானம் விபத்துக்குள்ளானது என அறிவித்துள்ளது” என்கின்றனர்.
அந்த ‘ஏதோ ஒரு நிர்ப்பந்தம்’ என்ன என்றே தெரியவில்லை.
விமானம் கடலில் மூழ்கியது என மலேசிய பிரதமர் அறிவித்த சில மணி நேரத்தில் நேற்றிரவு, பயணிகளின் உறவினர் அடங்கிய குழு ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “இந்த விபத்துக்கு காரணம், மலேசியன் ஏர்லைன்ஸ், மலேசிய அரசு, மற்றும் மலேசிய ராணுவம்” என்று கூறப்பட்டுள்ளது.
மலேசிய ராணுவத்தை இதற்குள் எதற்காக கொண்டுவருகிறார்கள்? ஒருவேளை அவர்களிடம் வேறு ஏதோ தகவல் உள்ளதோ
viruvirupu.com  

கருத்துகள் இல்லை: