திங்கள், 24 மார்ச், 2014

மதிமுகவுக்கு பாஜக பதில்: இந்தியாவின் பெயரை "பாரதம்" என மட்டுமே மாற்ற வேண்டும்


நாகர்கோவில்: நாட்டின் பெயரை "இந்திய ஐக்கிய நாடுகள்" என்று மாற்றுவதற்கு பதிலாக "பாரதம்" என்றுதான் மாற்ற வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன் .ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் கூட்டணி வெற்றிகரமாக ஏற்பட்டுவிட்டதைத் தொடர்ந்து திருப்பதியில் மொட்டை போட்ட கையோடு நேற்று நாகர்கோவில் வந்தால் பொன்.ராதாகிருஷ்ணன். இந்தியாவின் பெயரை அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 272 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றார்.?அப்போது பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதிமுக தமது தேர்தல் அறிக்கையில் நாட்டின் பெயரை இந்திய ஐக்கிய நாடுகள் என மாற்றம் செய்வோம் எனக் கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமெனில் "பாரதம்" என்றுதான் மாற்ற வேண்டும் என்றார். மேலும் நாடு முழுதும் உள்ள முதல்வர்களின் கருத்துக்களை எடுத்துக்கொண்டு, மாநிலத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு பணிபுரிபவராக பிரதமர் இருக்க வேண்டும் என்று நரேந்திரமோடி கூறியுள்ளதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: