ரியாத்: பட்டம் பெற்ற மகிழ்ச்சியை விமர்சையாக கொண்டாட திட்டம் போட்ட
சவுதியின் இளவரசர் 'டிஸ்னி லேண்ட்' ல் கோடிக்கணக்கில் செலவு செய்து
பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சவுதி அரேபியாவின் மன்னரான நயீப் பின் அப்துல்-அஜீஸ் அல் சவுப்-ன் மகனான
இளவரசர் ஃபஹ்த் அல்-சவுத். அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ஃபோர்ட்
பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஃபஹத், சமீபத்தில் பட்டம்
பெற்றார்.
அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும்
உறவினர்களுடன் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னி லேண்டில் ஜாலியாக
பொழுதைக் கழிக்க திட்டமிட்டார் ஃபஹத். அதற்கேற்ப மே மாதம் 22 ஆம் தேதி
முதல் 24 ஆம் தேதி வரை டிஸ்னி லேண்ட் கேளிக்கை பூங்காவை முற்றிலுமாக புக்
செய்தார்.
டிஸ்னி லேண்டிற்கு சென்ற ஃபஹத்திற்கு சிறப்பு கலைஞர்கள் மூலம் சிறப்பு
காட்சிகள் நடத்தப்பட்டது. சந்தோஷமாக சென்ற அந்த மூன்று நாட்களின் செலவு
மட்டும் கிட்டத்தட்ட 12.5கோடி பிரிட்டிஷ் பவுண்டுகளாம்.ஹ்த் அல்-சவுத்
செலவிட்டுள்ளார். இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் சுமார் 110 கோடிக்கு
சமமாம். அம்மாடியோவ்...
tamiloneindia.in
tamiloneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக