கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில்
பணியாற்றி வந்த
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க தன்னிடம் பணமில்லை என்று கூறியுள்ளார் விஜய் மல்லையா. கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணியாற்றி, பல மாத ஊதிய நிலுவையில் உள்ள ஊழியர்கள், தங்களது சம்பளத்தைக் கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேசிய மல்லையா, உங்களுக்கு ஊதியம் அளிக்க என்னிடம் பணமே இல்லை என்று கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிலுவையில் இருக்கும் ஊதியத்தைத் தரக் கோரி மல்லையாவின் வீட்டு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கிங்பிஷர் ஊரியர்கள்.
பெரும் காப்ரேட் முதலாளிகள் எப்படி எப்படி எல்லாம் பொது மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க முடியும் என்பதை கண்முன்பாகவே காட்டி கொண்டிருப்பவர்தான் இந்த விஜய மல்லையா . இவர் தனது விஸ்கி தொழிலை வெற்றிகரமாக செய்து விமான சேவை தொழிலதிபராக முன்னேற்றம் அடைந்தார் , முதலில் பெரும் கவர்சிகரமான விளம்பரங்கள் மூலம் மிக பெரும் வர்த்தக புரட்சி செய்ததாக பாவனை பண்ணி அரசாங்க தனியார் வங்கிகளிலும் பங்கு மார்கட்டிலும் தனது ஊரை அடித்து உலையில் போடும் கைங்கரியத்தை செய்துள்ளார். இவரிடம் பெரும் பெரும் அரசிலவாதிகள் எல்லாம் கைநீட்டி உள்ளனர், அம்மா உட்பட,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக